இலங்கைத் தீவின் மீது அமெரிக்க-சீன வல்லரசுகளது போட்டி தொடர்ச்சியானதாக நகர்கிறது. கால இடைவெளியின்றி இராஜதந்திரிகளது வருகையும் உரையாடல் இராஜதந்திரமும் ஒத்துழைப்பு நடவடிக்கையும் இரு நாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விரு நாட்டினது நடவடிக்கைகளும் தென் இலங்கையை மையப்படுத்தி அமைய தென் இலங்கை அரசாங்கமும் அதன் அரச இயந்திரமும் வடக்கு கிழக்கு உட்பட முழுத்தீவையும் தனது எதிர்கால இருப்புக்கான தயாரிப்புகளை நிகழ்த்திவருகிறது. குறிப்பாக தென் இலங்iகியல் தேர்தலையும் பொருளாதா தளம்பலையும் கையாளும் அதே நேரம் வடக்கு கிழக்கில் மத மற்றும் இன முரண்பாடுகளையும் நிர்வாக மோதல்களையும் முதன்மைப்படுத்திக் கொண்டு செயல்படுகிறது. ஆட்கடத்தல், போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைகளை அளவுக்கதிகமாக கட்டவீழ்த்துவிட்டு தமிழ் மக்களது கவனத்தை தேசியம் சார்ந்து குவியவிடாது தடுப்பதில் வெற்றி கண்டுவருகிறது. இதனை தென் இலங்கை ஆட்சி மட்டுமல்லாது ஏனைய அனைத்து தென் இலங்கை அரசு, அரசுசாராத மற்றும் மத இயந்திரங்களும் கவனத்தில் கொண்டு செயல்படுத்துகிறன. இக்கட்டுரையும் அமெரிக்க-சீனப் போட்டிக்குள் தென் இலங்கை இயங்கும் அரசியலைத் தேடுவதாக உள்ளது.
இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக மதத்துன்புறுத்தில்கள் நிகழ்வதாக 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த சுயாதீன அறிகச்கையில் அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இன,மத அடிப்படையில் சிறுபான்மையினரை மதித்து நல்லிணக்க செயல்பாட்டின் ஓரங்கமாக மதச்சுதந்திரத்தை உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையின் ஜனாதிபதி பிரதமர் ஆகியோருடனான சந்திப்பில் அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு குறிப்பாக காவலில் வைக்கப்பட்டவர்களுக்கு உரிய நடைமுறையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்க இராஜாங்க திணைக்கள் இராஜதந்திரிகள் அரசாங்க அதிகாரிகளிடம் குறிப்பிட்டதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
16.05.2023 முதல் சீனாவின் யுனான் மாகாண ஆளுனர் வாங் யூபோ இலங்கைக்கு ஐந்து நாள் அரசமுறை விஜயமாக வருகை தந்துள்ளார். அவர் கொழும்பு, கண்டி, பொலநறுவை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இவரது விஜயத்தில் இரு நாட்டின் வெளியுறவு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான முன்மொழிவுகளை அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கைக்கும் யுனான் மாகாணத்திற்குமான உறவு வரலாற்று ரீதியான நட்புடையதென இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய இரு போட்டியிலுள்ள வல்லரசுகள் இலங்கைத்தீவில் களமாடும் அரசியல் மேலாதிக்கம் செய்வதற்கான செய்முறையாகத் தெரிகிறது.இரு தரப்பும் தொடர்ச்சியாக தமது ஆதிக்கத்தை நிறுவ முயலுகின்ற போது இராஜதந்திர சொல்லாடல்களை அவ்வப்போது வெளிப்படத்துவதில் கவனம் கொள்கின்றன. அதன் மீது நம்பிக்கை வைப்பதனைவிட அதனை எதிர்கொள்ளதே தமிழ் தரப்பு முயலுதல் அவசியமானது. தென் இலங்கையின் போக்கு அத்தகைய வல்லரசுகளை நிறுத்திவிட்டு வடக்கு கிழக்கு மீதான செயல்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்கின்றன. ஆனால் தமிழ் தரப்பு மட்டுமே வல்லரசுகளின் இராஜதந்திர சொல்வலாடலை நம்பி செயல்வடிவத்திற்காக காத்திருக்கின்றன. அத்தகைய வல்லரசுகளது சொல்லாடலின் உண்மைத் தன்மைகளை நோக்குவது அவசியமானது.
ஒன்று, அமெரிக்காவின் சிறுபான்மையினர் மீதான இராஜதந்திர சொல்லாடல் இலங்கைத் தீவுக்கு மட்டுமுரியதல்ல. அது உலகளாவிய ரீதியான உபாயமானது. மத உரிமை பற்றிய நியாயப்பாட்டை தனது நாட்டிலே முழுமையாக பேணமுடியாத அமெரிக்கா இலங்கைத் தீவிலுள்ள ஆட்சியாளரிடம் அத்தகைய உரிமையை கோருவது வேடிக்கையானது. ஆனால் அது அமெரிக்காவின் இராஜதந்திர நகர்வாகும். அதனை அமெரிக்கா மேற்கொள்ளவில்லை என்றால் அதன் இலங்கைத்தீவின் மீதான செல்வாக்கு பலவீனமடைந்துவிடும். தொடர்ச்சியாக சிறுபான்மை இனங்கள் மீதான தனது கருசனையை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தென் இலங்கையில் மாற்றம் நிகழும் போதும் தற்போதைய ஆட்சி சீனா சார்பு நிலையை அடைய முயலும் போதும் தலையீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். இதனால் சிறுபான்மை இனங்கள் அமெரிக்காவுடன் உறவு வைத்துக் கொள்ளும் நிலையை பலப்படுத்த முடியும். அதனால் மத்தியிலுள்ள தென் இலங்கை ஆட்சியை பாதுகாக்க முடியுமாக அமையும். அதனை நோக்கி அமெரிக்கத் தூதரகம் செயல்படுகிறதாகவே தெரிகிறது. அது மட்டுமன்றி சிறுபான்மை இனமாக ஈழத்தமிழர், முஸ்லிம்கள்,மலையகத் தமிழர் அமெரிக்காவால் அடையாளப்படுத்தப்படுகிறதா என்ற குழப்பம் நிலவுகிறது. ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமாக கருது முடியாத அமெரிக்காவால் ஈழத்தமிழரது உரிமை வென்றெடுக்க உதவும் என கருத முடியுமா என்பது கேள்விக்குரியதாகும். குறைந்தபட்சம் அரiசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நிலையைக் கூட அமெரிக்கா கொண்டிருக்கா என்பது கேள்விக்குரியதே. ஈழத்தமிழர் ஒரு சிறுபான்மையினர் என என்னுமே கருதும் நிலை அமெரிக்காவிடம் உள்ளதாகவே அமெரிக்காவின் வருடாந்த அறிக்கை உணர்த்துகிறது. அப்படியாயின் அமெரிக்கா தனது நலன்களுக்குட்பட்டு இராஜதந்திர செய்முறையை வெளிப்படுத்துகிறது. அது ஈழத்தமிழருக்கானதோ இலங்கைத்தீவுக்கானதோ இல்லை. அது முழுமையாக அமெரிகச்காவுக்கானது. தொடர்ந்து இலங்கைத்தீவில் அமெரிக்காவின் பிரசன்னம் நிரந்தரமானதாக அமைய வேண்டும் என்பதே அத்தகைய இராஜதந்திரமாகும்.
இரண்டு, சீனாவின் யுனான் மாகாண ஆளுநரது விஜயம் பொருளாதார ரீதியானது. இலங்கைத் தீவை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பொருளாதார அணுகுமுறையை பலமானதாக வைத்துக் கொள்ள முனைகிறது. அதற்கான உடன்பாடுகளை மத்திய அரச மட்டத்தில் மட்டுமல்லாது மாகாண மட்டத்திலும் பேணமுனைகிறது. கடந்த காலங்களில் யுனான் மாகாணத்துடன் பல உடன்பாடுகளை கண்டி அனுராதபுரம் போன்ற மாவங்கள் மேற்கொண்டிருந்தது நினைவு கொள்ளத் தக்கது. இது சீனாவின் பிடிக்குள் இலங்கைத்தீவின் நகரங்கள் கிராமங்கள் என்ற வேறுபாடின்றி செயல்படுத்த முனைகிறதாவே தெரிகிறது. தென் இலங்கையில் அதிக உறவினைக் கொண்டுள்ள சீனா தற்போது கிழக்கு மாகாணத்தையும் அதிலும் திருகோணமலை மட்டக்களப்பை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அத்தகைய பிரதேசங்களில் சீனாவின் பிரசன்னம் ஒப்பீட்டடிப்படையில் குறைவானதாகவே உள்ளது. அதனை சரிசெய்வதன் மூலம் வடக்கு நோக்கிய அதன் நடைமுறைகளை பலப்படுத்’த முடியுமென சீன கருதுகிறது. சீனாவின் பொருளாதார மறுசீரமைப்பும் உலகத்தை நோக்கிய நகர்வும் அப்படியானதே. அதாவது படிப்படியாக கைப்பற்றுவதென்பதே அதன் உபாயமாகும். ஏனைய வல்லரசு நாடுகளைப் போலல்லாது படிப்படியாக நகர்ந்து இறுதியில் இலக்கை அடைவதே சீனாவின் உபாயமாகும். அதனையே சீனா நகர்த்தி வருகிறது. தென் இலங்கை கட்சி வேறுபாடின்றி சீனாவின் செல்வாக்குக்குள் அகப்பட்டுள்ளது. கிழக்குக்கு பின் வடக்கு என்ற நிலை ஏற்படும் போது இலங்’கைத் தீவு சினாவின் செல்வாக்கு பிரதேசமாக அமையும். தென் இலங்கை அமெரிக்காவை கையாளுகிறார்களே அன்றி உறவு கொள்வதாக கருதமுடியாது. அது சீனாவுடனே உறவு வைத்தள்ளது. இலங்கை ஒரு மதவாத நாடு. மதநல்லிணக்கத்தை பேணாத நாடு. ஆனால் சீனா சோஸலிஸம் என்கிறது. பல சந்தர்ப்பங்களில் கப்யூனிஸம் என்றும் அழைத்துக் கொள்ள முனைகிறது. அத்தகைய நாடு இலங்கை,பர்மா மற்றும் தாய்லாந்து போன்ற மதவாத நாடுகளுடன் உறவு வைத்துக் கொள்கிற தென்பது சித்தாந்த ரீதியில் நியாயமற்றது. உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்ற அடிப்படையில் சீனா-ஈழத்தமிழர் உறவே பலமானதாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறை அனைத்தும் தலைகீழானதாகவே அமைந்துள்ளது. போலியாகவேனும் ஈழத்தமிழர்-சீன உறவு சாத்தியமற்ற தென்பதை தென் இலங்கை மட்டுமன்றி பிராந்திய சர்தேச நலன் வளர்த்துவைத்துள்ளது. உலகம் போலிதனத்துக்குள்ளால் நகர்கிறது. சிந்தனையாளர் பேத்லர் குறிப்பிடுவது போல் உலகம் போலித்தனத்தக்குள்ளால் நகர்கிறது. சித்தாந்தங்களும் கொள்கைகளும் இல்லாத உலகத்திற்குள் மனித சமூகத்தின இருப்பு கட்டமைக்கப்பட்டது என்கிறார் பேத்லர்.
இத்தகைய வல்லரசுகளது நிலையை கடந்து தென் இலங்கை சிறுபான்மை இனங்கள் மீது மதவிரேதச் செய்துமுறையை மேற்கொண்டுவருகிறது. அதனை கண்டு கொண்ட அமெரிக்கா அதற்குரிய நடவடிக்கையாக அறிக்கையிடலோடு பூர்த்தி செய்துவிட்டது. ஏறக்குறைய கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க இராஜாங்க திணைக்கழத்தின் இராஜதந்திரிகளதுவருகை ஜனாதிபதியையும் பிரதமரையும் எச்சரிக்கை செய்துள்ளதாக வைத்துக் கொண்டால் அதன் பின்னர் வடக்கு கிழக்கில் அரங்கேறும் மதவிரோத செயல்களுக்கு என்ன பதில் அமெரிக்கா எதிர்பார்கிறது. அத்தகைய நடவடிக்கையை கட்டுபட்படுத்த ஏன் அமெரிக்காவால் முடியவில்லை. அப்படியானால் ஏன் அமெரிக்க வருடாந்த அறிக்கையிடலை மேற்கொள்கிறது என்பது தவறான கேள்வியாகாது. அவை அனைத்தும் ஏமாற்று வேலையாக பார்க்கப்படுத்தல் தவறானதாக அமையாது. அதாவது சிறுபான்மைகள் மீது அமெரிக்கா கொண்டுள்ள கருசனை போலியானதாகவே தெரிகிறது. தனது நலனுக்குட்பட்ட ஆட்சியை பாதுகாப்பதே அமெரிக்காவின் நோக்கமாகவுள்ளது. சீனா வெளிப்’படையாக சித்தாந்தத்தை கடந்து தென் இலங்கையுடன் கொண்டுள்ள நெருக்கம் முழுத்தீவையும் கைப்பற்றுவதாகவே உள்ளது. தென் இலங்கை தனது நலனை சரிவர நிறைவு செய்ய முனைகிறது. அமெரிக்கா இந்தியா சீனா போன்ற வல்லரசுகளது சூழலை பயன்படுத்திக் கொண்டு வடக்கு கிழக்கு மதவிரேத செயல் மட்டுமன்றி நில ஆக்கிரமிப்பையும் நிர்வாகம் மீதான தலையீட்டையும் எல்லையின்றி செயல்படுத்துகிறது. அமெரிக்காவினதும் இந்தியாவினதும் அறிக்யையை அசட்டை செய்யும் தென் இலங்கை வடக்கு கிழக்கை முழுமையாக ஆக்கிரமிப்பதென்ற நிகழ்ச்சி நிரலை பூரணப்படுத்துகிறது. அதற்காகவே வல்லரசுகளை அரணாகக் கொண்டு இயங்குகிறது.
எனவே ஈழத்தமிழர் அமெரிக்க சீன நகர்வு மட்டுமல்ல இந்தியா போன்ற பிற வல்லரசுகளது நகர்வுகளை இராஜதந்திர நகர்வாகக் கருதுவதுடன் அதற்கு சமதளத்தில் நகர்வது அவசியமானது. அனைத்து நாடுகளுக்கும் நலன் முதன்மையானது. அத்தகைய நலன்களை தவறான புரிதலுடன் தீர்வை நோக்கி நகர முடியுமொனவும் நம்பிக்கை கொள்வதே அபாயமானது. அதற்காக பதிலை ஈழத்தமிழர் இராஜதந்திர செய்முறையனால் கையாள்வதே பொருத்தாமானது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

