அரசியல் கட்டுரைகள்

இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு லெபனான் மீதான தரைவழித் தாக்குதலுக்கு தயாராகின்றனவா?

இஸ்ரேல் ஹமாஸ் போர் லெலானை நோக்கி விரிவாக்கம் அடைந்துள்ளது. படிப்படியாக தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் திட்டமிடுகின்றனர். அதற்கான தயாரிப்புகளை முழு அளவில் முன்னெடுக்கவும் அமெரிக்கா அதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாரான ஒரு சூழல் ஏற்படுகிறது. ஏறக்குறைய ஹமாஸ் அமைப்பும் ஈரானும் இஸ்ரேலின் அணுகுமுறையால் இப்போரிலிருந்து தற்காலிகமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஹிஸ்புல்லாவே இஸ்ரேலினும் அமெரிக்காவினதும் பிரதான எதிரியாகவுள்ளது.ஏனைய எதிரிகள் இஸ்ரேலிய-அமெரிக்க கூட்டிடம் தோல்வி கண்டுள்ளன. இக்கட்டுரையும் லெபனான் நோக்கிய தரைவழி தாக்குதலில் முக்கியத்துவத்தை தேடுவதாக உள்ளது

ஹிஸ்புல்லா அமைப்பை நோக்கி தரைவழி தாக்குதலுக்கான திட்டமிடலை ஆரம்பிக்கின்ற அதே வேளை சர்வதேச சமூகத்திடம் இருந்து அல்லது மேற்கு நாடுகளின் கூட்டிடமிருந்து போர் நிறுத்த உடன்படிக்கைக்கான கோரிக்கையும் வெளியாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா 21 நாட்களுக்கான போர் நிறுத்த கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது. அதற்கான ஆதரவினை மேற்கு நாடுகளும் கட்டார் சவுதியரேபியா உட்பட மேற்காசிய நாடுகளும் முன்மொழிந்துள்ளன. இது தொடர்பான உரையாடலை அமெரிக்கா முன்வைத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் தெரியப்படுத்தியுள்ளார்.

இதே சந்தர்ப்பத்தில் இஸ்ரேலிய பிரதமர் 27.09.2024 ஐக்கிய நாடு சபையில் உரையாற்றியுள்ளர். அவரது உரையின் சாராம்சம் இஸ்ரேலிய மக்களை பாதுகாப்பதும் அவர்களுடைய இருப்பை உத்தரவாதப்படுத்துவதும் இஸ்ரேலின் இறைமையை முதன்மைப்படுத்துவதும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதே சந்தர்ப்பத்தில் அவரது உரைக்கு அதிகமான விமர்சனங்களை பல தரப்பும் முன்வைத்தாலும் உலக நாடுகள் பெரிய அளவில் அதற்கான முக்கியத்துவத்தை கொடுத்துள்ளனர். இதே சந்தர்ப்பத்தில் லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி தெளிவாக இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்ததோடு இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதலால் லெபலான் மக்களின் மனித உரிமைகளும் இறையாண்மையும் அப்பட்டமாக மீறப்படுகிறது என்று வெளிப்படுத்தியுள்ளார். தாக்குதலை சர்வதேச மட்டத்தை அனேகமான கீழைத்தே நாடுகளின் தலைவர்கள் நிராகரித்துள்ளனர். அதே சந்தர்ப்பத்தில் மேற்கு நாடுகள் போர் நிறுத்த உடன்படிக்கை என்று தொடர்ச்சியான ஒரு உரையாடலை முன்வைத்து ஆரோக்கியமான போர்க்களத்தை தயார் செய்துவருகின்றன. இதனை அமெரிக்கா தலைமையிலான மேற்கு கூட்டு மேற்கொண்டு வருகிறது. கடந்த காலம் முழுவதும் ஹமாஸீடனான போர் நிறுத்த உடன்பாடு சாத்தியப்படுத்தாத ஒரு சூழலில் அதற்கான முயற்சிகளும் நடவடிக்கைகளை மீளமீள மேற்குலகம் முன்வைத்ததும் பேச்சுவார்த்தைகளை நகர்த்தியதும் அக்காலப் பகுதிகளில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைகள் இராணுவ தலைமைகள் ஹிஸ்புல்லாவின் இராணுவ தலைமைகள் என அனைத்து தரப்புக்களும் அழிக்கப்பட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. இக்கால பகுதியை சரியாகவே பயன்படுத்திக் கொண்டு இஸ்ரேலியை புலனாய்வுத்துறையும் இராணுவமும் முன்னநகர்ந்து வெற்றிகரமான தாக்குதல்களை சாத்தியப்படுத்தி இருக்கிறது. இந்த சூழலிலே மீளவும் லெபனான் நோக்கிய தாக்குதல்களை விரிவாக்கி இருக்கின்றது இதன் மூலம் மீளவும் ஒரு கரைவழிப் போரை செயல் முன்னெடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அதற்கு ஆதாரமாக இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுக்கப் போவதாக இஸ்ரேலின் இராணுவ தளபதிகளும் புலனாய்வு கட்டமைப்புகளும் வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஜெனரல் ஹெர்சி ஹலெவி எதிரியின் பகுதிகளுக்குள் நுழைவது அவசியம் என தனது இராணுவ பிரிவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் முழுவதும் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 700க்கும் மேற்பட்டவர்கள் பொது மக்கள் கொல்லப்பட்டதென்றும் 3000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததென்றும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாக்குதல்களின் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக்கிடங்குகள் ஏவுகணை நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிடுகிறது. அதே சந்தர்ப்பத்தில் தொடர்ச்சியாக இயக்கும் விமானங்களும் விமான தாக்குதல்களும் தங்களுடைய திட்டமிடங்களுக்குள்ளால் மேற்கொள்ளப்படுவதாக ஜெனரல் ஹலெவி வெளிபடுத்தியுள்ளார். இதனுடைய உள்நோக்கம் இதன் விளைவுகள் தரைவழி தாக்குதலுக்கான முனைப்பை தயார்படுத்தி இருக்கின்றது. அமெரிக்கா அதன் போர் நிறுத்த கோரிக்கை என்பது தரைவழி தாக்குதலுக்கான ஆயுதங்களையும் இராணுவத்தையும் தயார் செய்வதற்கான அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக லெபனானுடைய ஹிஸ்புல்லா அமைப்புகள் அழிக்கப்படுவதும் அதனால் மேற்கொள்ளப்படுகின்ற ஏவுகணை தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதும் அது பெரும் அளவுக்கு வடக்கு இஸ்ரேலின் குடியிருப்புகளை உத்தரவாதப்படுத்துவதற்கும் வழி வகுக்கும் என இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிடுகிறது. லெபனானின் தென்பகுதி நோக்கி தாக்குதலை மேற்கொள்ளுகின்ற செய்திய இராணுவம் வடக்கு இஸ்ரேலில் மீள குடியமர்வை உத்திரவாதப்படுத்துவதற்கான நோக்கோடு மேற்கொள்ளப்படுவதாக வெளிப்படுத்துகின்றது.

இது நிச்சயமாக தரைவழித் தாக்குதல் இஸ்ரேல் மேற்கொள்வது தவிர்க்க முடியாதது என்ற உணர்வை இஸ்ரேலியர்கள் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தினார்கள். அதனை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் ஐக்கிய நாடுகள் சபையில் உரை வெளிப்படுத்துகின்றது. ஐக்கிய நாடுகள் சபை உலகத்தின் முக்கியமான மேற்கு நாடுகள் அல்லாத தலைவர்கள் போர் நிறுத்தத்தை கூறுகின்ற போதும் அது பெரும் அளவுக்கு அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டினுடைய நலன்களை நிறைவு செய்வதாகவே அமையும். இஸ்ரேலுடைய தாக்குதல் தவிர்க்க முடியாத சூழலை கட்டமைப்பதில் மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் முனைப்புடன் செயல்படுகின்றன. ஐக்கிய நாடு சபையில் இஸ்ரேலியப் பிரதமர் உரையாற்றுகின்ற போது இத்தாக்குதலின் முக்கியத்துவம் இஸ்ரேலின் இறையாண்மைக்கு அவசியமானது என்பதையும் மக்களை பாதுகாப்பது என்பதையும் முதன்மைப்படுத்தியிருந்தார். விமான தாக்குதல்கள் இராணுவ தளபதிகள் அணுகுமுறைகள் மற்றும் சர்வதேச மட்டத்தில் மேற்கு நாடுகள் முன்வைக்கின்ற விவாதங்கள் என்பனவற்றை அவதானிக்கின்ற போது விரைவில் ஒரு தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு தயாராகிறது என்பது தெளிவாகவே கண்டுகொள்ள முடிகிறது.

இதிலிருந்து மீள்வதற்கு சர்வதேசம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளும் கடந்த காலத்தில் தோற்றது போல் இஸ்ரேலின் முன் தோற்றுப் போகும் என்பதும் தரைவழி தாக்குதல் அவசியமானதா இல்லையா என்பதை விமானத் தாக்குதல்களும் ஏவுகணை தாக்குதல்களும் ஹிஸ்புல்லாவை அழிவுக்கு உட்படுத்துகின்ற நிலைய பொறுத்து அமைய உள்ளது சில சந்தர்ப்பங்களில் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலே நிலவும் புவியியல் ரீதியான தொடர் இப்போரை இஸ்ரேல் பக்கம் சாத்தியப்படுத்த உதவக் கூடியது. வடக்கு இஸ்ரேலிய பகுதியும் புவியியல் ரீதியில் அதிக நெருக்கம் கொண்ட பிரதேசங்களாக உள்ளது. 1967களில் இஸ்ரேலிய இராணுவ தளபதியாக பணிபுரிந்த மோசோ தயான் சிரியா மீதான தாக்குதலை தொடக்கிருந்தார் அத்தகைய தொடக்கமே இஸ்ரேலின் வெற்றியை போரில் ஏற்படுத்தியது. அவ்வாறான ஒரு சூழலுக்குள்ளேயே லெபனான் மீதான உத்தி பொருத்தம். இது ஹிஸ்புல்லாவுக்கும் பொருத்தும் இஸ்ரேலின் சில தீர்மானங்களை புவிசார் அரசியல் ரீதியில் முன்னெடுக்க திட்டமிடுகிறார்.

ஏற்கனவே முழுமையாக ஈரான் ஹமாஸ் போன்றன அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிற நிலையில் ஹிஸ்புல்லாக்களும் இப்போரிலிருந்து முற்றாக முடிவுக்கு கொண்டு இஸ்ரேல் முயலுகிறது எனவே தாக்குதலினுடைய முக்கிய நோக்கம் வடக்கு இஸ்ரேல் பகுதியில் யூதர்களை குடியமர்த்துவது போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அமைய இருக்கின்றது. அதனை நோக்கி மேற்கு நாடுகளும், இஸ்ரேலும் நகர்கின்றன.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-