இஸ்ரேல் – பலஸ்தீன போர் முடிவின்றி நீள்கிறது. இஸ்ரேல் அமைந்துள்ள பலஸ்தீனியரின் பள்ளிவாசலான அல் அஹ்சா வளாகத்தில் கூடியிருந்த ஒன்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படைகளின் தாக்குதலிலிருந்து ஆரம்பமானது. மே-8 இல் (2021) தொடங்கிய தாக்குதல் இரு தரப்பாலும் தொடருகிறது. காஸா போரின் மையமாக மாறியுள்ளது. அதிக சனநெரிசல் உள்ள பகுதியை நோக்கிய இஸ்ரேலிய விமானங்களும் ஏவுகணைகளும் பாரிய அழிவினை ஏற்படுத்திக் கொண்டிருகிறது. உலகத் தலைவர்கள் கண்டனங்களையும் கோரிக்கைகளையுமே முன்வைத்து வருகின்றனர். ஐ.நா.சபை இயலாமையின் விழிம்பிலும் அமெரிக்கா-இஸ்ரேல் உத்தியிலும் போர் தொடர்கிறது. ஹமாஸ் சரியான திட்டமிடலுடன் போரைத் தொடங்கியது போல் காணப்பட்டாலும் இஸ்ரேலின் நகர்வுகள் அபாயமானவையாக உள்ளன.
19.05.2021 தரவுகளின் படி 219 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டும் அதில் 58 மேற்பட்டவர்கள் பெண்களும் 12 மேற்பட்ட சிறுவர்களும் அடங்குவர். ஏறக்குறைய 1400 பேருக்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டும் உள்ளனர். இதன் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 58 ஆயிரம் பேர் இடப்பெயர்ந்துள்ளனர். அதே நேரம் யூதர்கள் 12 போர் கொல்லப்பட்டும் பலர் காயபட்பட்டுமுள்ளனர். பெரும் சொத்திழப்புகள் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பதுங்கு குழிகளில் வாழ்க்கையை யூதர்கள் அனுபவிக்க நேர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாட்டு வரலாறு நீண்டது. தீர்க்கப்பட முடியாத நிலையை இஸ்ரேல் தனது இராணுவ பலத்தால் உறுதிப்படுத்தி வருகிறது. கிழக்கு ஜெரூசலரத்தை நோக்கிய போராட்டம் இரு தரப்பிற்கும் அதிக வலியை ஏற்படுத்தியிருந்தது. 1948 மே 9 திகதி னுநசை துயளளin படுகொலை என அறியப்பட்ட நக்வா பகுதியில் 78 ஆயிரம் பலஸ்தீனர்களை ஆயுதமுனையில் வைத்துக் கொண்டு யூத இராணுவம் பாலஸ்தீன அரபுக்களை படுகொலை செய்தது. 109 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்ற வேறுபாடின்றி கொலட்லப்பட்டனர். அதன் அடுத்த வாரங்களிலேயே யூத தேசம் பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஆரம்பமான யூத தேசம் இந்த ஆண்டும் இஸ்லாமிய புனித நாளான ரம்ழான் காலப்பகுதியில் போரைத் தொடக்கியுள்ளது.
ஹமாஸ்-ன் ஏவுகணைகள் இஸ்ரேலிய ஏவுகணைகளால் தடுத்து நிறுத்தப்பட்டாலும் சில ஏவுகணைகள் இஸ்ரேலிய பகுதிக்குள் கடும் சேதங்களை ஏற்படுத்தியது. அதனை அடுத்து இஸ்ரேலிய விமானங்கள் காசா மற்றும் பலஸ்தீனியர் வாழும் பகுதிகளில் பாரிய தாக்குதல்களை நடாத்தியது. மே-10இற்கு பின்னர் இஸ்ரேல் – பலஸ்தீன போர் உக்கிர நிலையை பெற்றுள்ளது. சாஸா பகுதியில், இஸ்ரேலியர்களும் பலஸ்தீனியர்களும் சம விகிதத்தில் வாழும் லோட் நகரம் முழுவதும் உள்நாட்டு கலவரம் வெடித்திருந்தது.. இதனால் இஸ்ரேலிய அரசாங்கம் லோட் நகரம் முழுவதும் அவசரகால நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளதோடு பொலிஸாரும் இராணுவமும் குவித்தது. ஹமாஸ் – இஸ்ரேல் படைகளிடையிலே மோதல் நீடித்து வரும் சூழலில் ஹாமாஸ் அமைப்பு இயங்கும் காஸா முனையில் அமைந்துள்ள கட்டடிடங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களை நிகழ்த்தின. ஆரம்பத்தில் காஸா டவர் என்று அழைக்கப்படும் 13 மாடி கட்டடிடம் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது. . காஸா டவர் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு இயங்கியதாக இஸரேலிய இராணுவ தரப்பு அறிவித்துள்ளது.அவ்வாறே சர்வதேச ஊடகங்களின் மையமாக விளங்கிய கட்டிடத்தையும் இஸ்ரேல் விமானத்தாக்குதல் தாக்கி அழித்துள்ளன. இக்கட்டிடமான அல்ஜலாலா தாக்கி அழிக்கப்பட்ட காட்சியை ஊடகங்களில் பார்க்க முடிந்தது. இக் கட்டிடத்திலேயே அல்ஜசிரா, அசோசியேடட் பிரஸ் போன்ற சர்தேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் உட்பட பல முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
இத்தகைய பாரிய தாக்குதலை தடுத்து நிறுத்தும் வலு ஒரே நாடாக அமெரிக்கா மட்டுமே உண்டு. அடிப்படையில் இஸ்ரேலின் நெருக்கமான நட்பு நாடாக அமெரிக்காவே விளங்குகிறது. ஆனால் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோவை பாவித்து தடுக்க முயலுகிறது. அமைதியை ஏற்படுத்த எகிப்து (17.05.2021) மற்றும் அமெரிக்காவுடன இணைந்து செயல்பட முயன்ற போதும் சாத்தியமான எந்த வழிமுறையும் எட்டப்படவில்லை. அதன் பின்பே ஐ.நா பாதுகாப்புச் சபை 18.05.2021 கூடி ஆராயந்து போர் நிறுத்த உடன்பாட்டுக்கு இரு தரப்பினையும் கோரியுள்ளது. ஆனால் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு மறுத்துள்ளதுடன் ஹமாஸ் அதற்கான நேரம் கடந்துவிட்டதாகவும் நெதன்யாகு மீட்புக்கான போர் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
அதே நேரம் 19.05.2021 இரவு ஹமாஸின் 40 க்கு மேற்பட்ட இலக்குகளை நோக்கியஇஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தியதாகவும் அவை அனைத்தும் ஹமாஸ் அமைப்பினால் தென் காஸாவில் உருவாக்கப்பட்ட சுரங்கப் கட்டமைப்பு தகர்ப்பதற்கானதெனவும் அதில் 52 போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. மறுபக்கத்தில் ஐ.நா வின் மனிதாபிமான அமைப்பு விடுத்த அறிவிப்பின் பிரகாரம் காஸாப்பகுதியில் 450 மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் இதில் ஆறு வைத்திய சாலைகளும் ஒன்பதிற்கு மேற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்ளும் தாக்கப்பட்டு;ள்ளமையும் தெரியவந்துள்ளது. ஏறக்குறைய அனைத்துமே பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதை வழியே இஸ்ரேல் மீது தாக்குதல் நிகழ்வதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. அதனால் அத்தகைய பாதைகளை தாக்கி அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.அதே நேரம் லெபனான் சிரியா மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற போராளிக்குழுக்கள் இஸ்ரேல் தலை நகரை நோக்கி தாக்குவதாகவும் ஏனைய பாலஸ்தீன போராளிக்குழுக்கள் தாக்குதலில் ஈடுபடுவதாகவும் இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த பாலஸ்தீன போர்களுடன் ஒப்பிடும் போது தற்போதைய போர் இஸ்ரேலியருக்குசும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுஞள்ளதாக மேற்குலக ஊடகங்கள் அல்லாதவை சுட்டிக் காட்டுகின்றன. மேற்குலக ஊடகங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் போன்று நியாயப்படுத்த முயலுகின்றன. இதில் தருக்கி சவுதியரேபியா போன்ற நாடுகளும் இ.ஸ்ரேலுக்கு எதிரான எண்ணத்தை வெளிப்படுத்தியுpருந்தன. எனவே இது ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டு;ளளது. ஈரானின் தயாரிப்பு ஏவுகணைகள் இஸ்ரேல் நகரங்களில் வீழ்ந்துள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
எனவே பாலஸ்தீன மக்கள் மீண்டும் அகதிகளாகவும் உணவின்றியும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 72 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அயல் நாடுகளை நோக்கி நகர்வதுடன் கடல்மார்க்கமாகவும் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுகிறார்கள். உலக மாற்றங்களும் புதிய ஒழுங்கும் பாலஸ்தீனர்கள் மத்தியில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சீனா ரஷ;சியாவின் உலகளாவிய பலம் அதிகரித்தாலும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டின் நகர்வுகளை தகர்க்க முடியவில்லை என்பதே கவனத்திற்குரியதாகும். எத்தகைய அதிகாரச் சமநிலைக்கான போட்டி எழுந்தாலும் அடிப்படையில் இஸ்ரேலின் இருப்பைவயும் அதன் தாக்குதலையும் வேறு சக்திகளால் முடிபுக்கு கொண்டுவர முடியவில்லை. மேற்காசியா பங்கு போடப்பட்டுள்ளதே அன்றி இஸ்ரேலின் பலம் மட்டுப்படுத்தப்பட முடியாத நிலை தற்போதும் உள்ளது. இது பாலஸ்தீனர்களது துயரத்தின் தொடராக கடந்து செல்லப் போகிறதாகவே தெரிகிறது. அது துயரமா அல்லது பேரழிவா என்பதிலேயே பாலஸ்தீனர்களது இருப்பு தங்கியுள்ளது. சிறுபான்மை தேசிய இனங்களது உலகம் முடிபுக்கு வந்து பலதசாப்தங்களாகிவிட்டது. இது ஈழத்தமிழருக்கும் பொருந்தும்.
-பேராசிரியா கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தீம்புனல்)
