December 12, 2024
பிரபலமானவை

இஸ்ரேல் ஓர் அரசியல் வரலாறு

நூல் குறிப்பு

நூல் தலைப்பு: இஸ்ரேல் ஓர் அரசியல் வரலாறு
நூலாசிரியர்: கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்
முதற் பதிப்பு: 2018
பதிப்பபாளர்: சதபூ.பத்மசீலன்
அச்சிடல்: சேமமடு பதிப்பகம், கொழும்பு-11.
வெளியீடு: சேமமடு பொத்தகசாலை.
பக்கங்கள்: x+214
ISBN: 978-955-685-052-9

 

முன்னுரை

‘இஸ்ரேல் ஓர் அரசியல் வரலாறு’ எனும் நூலானது கடந்த இரண்டு வருடகால முயற்சியின் பிரதிபலிப்பாக வெளிவந்துள்ளது. இதில் 11 தலைப்புக்களுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் பின்னிணைப்பாகவும் தரப்பட்டுள்ளது. அனைத்து தலைபபுக்களும் இஸ்ரேலின் அரசியல் வரலாற்றை வெளிப்படுத்துகிறது. இப்பகுதி ஆளுமை சார் அரசியல் எனும் ஆய்வுப்பரப்பினூடாக இஸ்ரேலினது அரசியல் வரலாறு ஆராயாடப்படுகின்றது.

இந்நூலின் ஆரம்ப பகுதி யூதர்களின் புராதன வரலாற்றினை விளங்கிக் கொள்ளும் விதத்திலும் அதன் மீதான பற்றுதல் எப்படி யூதர்களை தேசம் நோக்கிய நியமங்களுக்கு நகர்த்தியது என்ற அனுபவம் பகிரப்படுகிறது. அப்பகுதி முழுமையான வரலாற்றுப் பக்கமாகவே அமைந்துள்ளது. உலகிலுள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் யூதர்களின் அணுகுமுறை ஒரு பாடமாக அமையும் என்ற எதிர்பார்க்கையுடன் இப்பகுதியின் கருதுகோள் ஆராயப்பட்டுள்ளது. அதே நேரம் யூதர்களின் பிந்திய மிலேச்சத்தனமான அணுகுமுறையான யூதத் தேசியவாதமும் விபரிக்கப்படுகிறது. இது இலங்கை தமிழருக்கும் அதன் அரசியல் தலைமைகளுக்கும் அதிக செய்திகளை வெளிபப்டுத்தும் என்ற எதிர்பார்க்கையை கொண்டு தயாரிக்கப்பட்டது.

இந்நூலின் ஏனைய பகுதிகள் யூத தலைமைத்துவத்தின் ஆளுமைகளை சார்ந்ததொன்றாக உள்ளது. அத்தகைய அரசியல் ஆளுமைகள் ஒரு தேசத்தின், ஒரு இனத்தின் வரலாற்றை எப்படி உருவாக்கி நிறுத்தியுள்ளன என்பது முழுமையாக தரப்பட்டுள்ளது. சில அனுபங்களும் அதன் பதிவுகளும் மனித சமூகத்தினை நவீன வளர்ச்சிக்கு அடினாதமாகிறது. அரசறிவியலும் அத்தகைய ஆளுமைகளின் தனித்தன்மைகளை அடையாளம் கண்டு புதிய சமூகத்தின் மாறுதலுக்கு வித்திடுகின்றது. அரசறிவியலின் ஒர் ஆய்வுப் பகுதியாக ஆளுமைசார் அரசியல் அமைந்திருந்தாலும் அதுவே முதன்மையான எண்ணக்கருவாக உலக வரலாற்றில் பதியபப்ட்டுள்ளது. தனிமனித ஆளுமைகளே உலக வரலாற்றின் அடிப்படைகளாகவும் தேசங்களதும், தேசியங்களதும் உருவாக்கத்திற்கு மூலவேராக அமைந்துள்ளன. அரசறிவியலின் கோட்பாட்டு வடிவங்களுக்கு நடைமுறை அர்த்தம் கொடுக்கும் மிகப்பிரதான பகுதியாக ஆளுமைசார் அரசியலுக்கே உரியதாகும்.
இந்நூல் அத்தகைய வியாசமான எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதில் 2011/12 கல்வி ஆண்டு அரசறிவியல் மாணவர்கள் காரணமானவர்களாக அமைந்துள்ளமை மகிழ்ச்சியான விடயமாகும். அவர்களது மூன்றாம் வருட முதலாம் அரையாண்டு கற்றலில் ஒரு பகுதியான இஸ்ரேல் – பலஸ்தீனம் எனும் அலகில் குழு அறிக்கையின் (Group Presentation) பதிவுகளை முறைப்படி ஒழுங்குபடுத்தி விரிவாக்கி தயார் செய்யப்பட்ட தொகுப்பாகவே இந்நூல் அமைந்துள்ளது. இதனை உருவாக்குவதற்கு குறித்த கல்வி ஆண்டு அரசறிவியல் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் அவர்களது வகிபங்கினை பாராட்டுகின்றேன். இந்த முயற்சியை மேற்கொள்ள எடுத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 2011/12 ஆண்டு துறைசார் மாணவ பிரிதிநிதி கே.கஜீபன் மற்றும் ஆh.;தாரகன், ரி.விஜயராஜ், பி.குகவரதர் ஆகியோர் அதிகமான பங்களிப்பு செய்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றிகள். அவ்வாறே கணணி வடிவமைப்பிலும் எழுத்து திருத்தங்களை அவதானித்தலிலும் அதே பிரிவு மாணவர்கள் தற்போது உதவி விரிவுரையாளர்களாக பணிபுரியும் பி.லக்ஷனா, எஸ்.புளோரிடா, எஸ்.சுரேகா ஆகியோருக்கும் நன்றிகள். குறித்த கல்வி ஆண்டு மாணவர்கள் ஒவ்வொருவரதும் உழைப்பும் ஆய்வு மீதான அவாவும் இந்நூலுக்கான முதலீடாகும். இதே போன்று மேலும் பல நூல்களை மாணவர்களுடன் இணைந்து வெளியீடு செய்யும் முயற்சி அவசியமானது.

கடந்த பத்து வருடங்களுக்கு மேல் இப்பாடநெறியை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் என்ற வகையில் மாணவரக்ளுடன் இணைந்து இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியான தருணமாக உள்ளது. மாணவர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதே சிறந்த ஆய்வுக் கலாசாரத்தை ஏற்படுத்தும். அது எதிர்கால சந்ததிக்கு சரியான ஆய்வு பாரம்பரியத்தை பரிமாற்றுவதுடன் பல்கலைக்கழகத்திற்கு நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தும்.

நிறைவாக இந்நூலை அச்சிட்டு வெளியிடுவதற்கு உதவிய சேமமடு பதிப்பகத்தினருக்கும் அதன் முகாமையாளருக்கும் நன்றிகள். எனது வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பேராடும் எனது மனைவி சாந்தினிக்கும் பிள்ளைகளான ஷரோன். ஷாரங்கிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

 

-கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்-