உலக அரசியலில் பார்வை மீளவும் உக்கரையின்-ரஷ்சியா போர்ச்சூழலை நோக்கி நகர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிக்குரிய நடவடிக்கைகளை கொண்டு வர அதிகம் முயலுகின்றார். அலாஸ்கா சந்திப்புக்கு பின்னர் விடுபட்டிருந்த ரஷ்சிய-அமெரிக்க உறவை அழுத்தங்களுக்குள்ளால் ரஷ்சிய ஜனாதிபதி மீது மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். ஆனாலும் ரஷ்சியாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பது மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மீது ரஷ்சியாவின் கண்காணிப்பையும் கடல் ரோந்து நடவடிக்கைகளையும் முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளதனால் ஏற்பட்ட பதற்றமாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் ரஷ்சிய-உக்ரையின் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி முன்வைத்துள்ள அம்சங்களையும் பின்பற்றும் அணுகுமுறைகளையும் தேடுவதாக அமைந்துள்ளது.
பிரஸ்சில்ஸ் (Brussels) கூடுகின்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் உக்கிரைன் உடனான ரஷ்சியப் போரை அழுத்தங்களுக்குள்ளால் முடிவுக்கு கொண்டு வர திட்டமிடுகின்றனர். உக்ரையின் ஜனாதிபதியும் துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பொருளாதார இராணுவ உதவிகளை பெறும் நோக்கில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதே நேரம் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் டன் டிறிஸ்கோல் (Dan Driscoll) உக்ரேன் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கும் நோக்கோடு உக்கிரேனுக்கு (19.11.2025) பயணமாகி உள்ளமை கவனிக்கத்தக்கது. இவ்வாறு தீவிரமடையும் உக்ரைன் மீதான ரஷ்சியாவின் தாக்குதலையும் அதனை கையாளும் நகர்வுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு போரை நிறுத்துவதற்கான தேவைப்பாடு அதற்கான நடவடிக்கைகளும் மேற்குலகத்தினால் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய அணுகுமுறையை ஆழமாக தேடுவது அவசியமானது.
முதலில் அமெரிக்க ஜனாதிபதி முன்வைத்துள்ள 28 அம்சத் திட்டத்தினை சுருக்கமாக பார்ப்பது அவசியமானது. உக்ரையினின் இறையாண்மை பாதுகாக்கப்படும். ரஷ்சியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் மற்றும் உக்ரையினுக்கும் விரிவான ஆக்கிரமிப்பில்லாத ஒப்பந்தம் ஒன்று வரையறுக்கப்படும். அது கடந்த 30 ஆண்டுகளில் ரஷ;சியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான தெரிவின்மைகள் தீர்க்கப்படும்.ரஷ;சியா அயல்நாடுகளை ஆக்கிரமிக்காது அவ்வாறே நேட்டோ மேலும் விஸ்தரிக்கப்படாது. ஊலகளாவிய அமைதி, பாதுகாப்பு அச்சுறுத்தலை தவிர்த்தல், பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை உருவாக்குதல், அனைத்து பபாதுகாப்புப் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் ரஷ;சியாவுக்கும் நேட்டோவுக்கும் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் பேச்சுக்களை நடாத்துதல்.உக்ரையினுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும். உக்ரையின் இராணுவத்திழன் எண்ணிக்கை 6 லட்சத்திற்குள் மட்டுப்படுத்தப்படும். உக்ரையின் நேட்டோவில் சேர்த்துக் கொள்ளப்படாது என்பதை நேட்டோவும் உக்ரையின் சேராது என்பதையும் சட்டரீதியில் உறுதிப்படுத்தப்படும். நேட்டோப்படைகள் உக்ரையினில் நிறுத்தப்படாது என்பதுடன் ஐரோப்பாவின் விமானங்கள் போலந்தில் மட்டுமே நிறுத்தப்படும் என்பதை உறுதி செய்யும். இவற்றுக்கு அமெரிக்கா உத்தரவாதமளிக்கும். உக்ரையின் ஐரோப்பிய சந்தையில் குறுகிய காலம் செயல்பட அனுமதியுண்டு. ஊக்ரையினை மீளக்கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கைகளை உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளல். ரஷ்சியா உலகப் பொருளாதாரத்தில் மீளவும் இணைக்கப்படும். முடக்கப்பட்ட ரஷ்சிய நிதியை மீள செயல்படுத்தவும் ரஷ்சிய-அமெரிக்க கூட்டு முதலீட்டுத் திட்டங்களை உக்ரையினில் மேற்கொள்ளவும் வாய்ப்பளிப்பது. இதில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பிரச்சினைக்கு ரஷ்சிய-அமெரிக்க கூட்டு குழுவொன்று அமைக்கப்படும். ரஷ்சியா ஐரோப்பா மற்றும் உக்ரையின் மீது ஆக்கிரமிப்பில்லாத நிலையை சட்டரீதியில் உறுதிப்படுத்தும். அணுவாயுத தடை மற்றும் பரவலைத் தடை செய்யும் முன்னய உடன்பாட்டை நீடிக்கவும் செயல்படுத்தவும் ரஷ்சிய-அமெரிக்கா உடன்பாடு (START_1) அடையும். 2009 இல் கலாவதியான START_1 மீளமைக்கப்படும். உக்ரையின் அணுவாயுதம் அல்லாத நடாக இருப்பதற்கு ஒப்புதலளிக்கும். ஜபோஜ்ஜிச்யா (Zaporizhzhya) அணுமின் நிலையம் மீளமைக்கப்பட்டு இரு நாடுகளும் சமமாக மின்சாரத்தை பெற உத்தரவாதமளிக்கப்பட வேண்டும். ரஷ்சியாவினால் கைப்பற்றப்பட்ட ஐந்து பிராந்தியங்களை அமெரிக்கா அங்கீகர்க்கும். ஏனைய பிராந்தியங்களை நோக்கிய விஸ்தரிப்பை ரஷ்சியா மேற்கொள்ளாது. வர்த்தகத்திற்கு கருங்கடலை உக்ரையின் பாவிக்க முடியும். சுமூகமான உடன்பாட்டை மீறுதல் எந்த பாதுகாப்பு உத்தரவாமும் வழங்கப்படாது. 100 நாட்களில் உக்ரையினில் தேர்தல் நடைபெறும். போரில் ஈடுபட்ட இரு தரப்பும் மன்னிக்கப்படும். சமாதான உடன்பாடு ட்ரம்ப் தலைமையிலான சமாதான சபையினால் கண்காணிக்கப்படும். உடன்பாட்டின் பிரகாரம் போர்நிறுத்தம் உடனடியாக அமுலுக்கு வரும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவது ஐரோப்பாவை பொறுத்தவரையில் ரஷ;சியாவுக்கு எதிரான அணுகுமுறைகளில் ஒன்றாகவே உக்கரையின் போரை கருதுகின்றனர் தோற்கடிக்கவும் அல்லது எதிர்கொள்ளவும் தேவை என்ற எண்ணப்பாங்கு மேற்கு ஐரோப்பிய அரசுகளிடம் உண்டு. இது கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் பீடித்துள்ளது. ரஷ்சியாவின் முன்னைய சோவியத் கனவுகளை மீளமைக்க முயலுமன்றது என்ற அச்சம் மேற்கு ஐரோப்பாவை நோக்கி மட்டுமல்ல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு உண்டு. இதனால் முழு நீளப்போர் ஒன்றை உக்ரைன் ரஷ்சியா மீது நிகழ்த்துவது ஐரோப்பாவுக்கு ஒட்டுமொத்தமாக இலாபத்தை கொடுக்கும் ஒன்றாகவே தெரிகின்றது. பிரித்தானியாவின் விமானங்களை ரஷ்சிய போர்க்கப்பல்கள் கண்காணிப்பதாகவும் கடல் வழியான கேபிள் தொடர்புகளை தொடர்ச்சியாக ரஷ்சிய போர் கப்பல்கள் அவதானிப்பதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததோடு ரஷ்சியா மீதான எச்சரிக்கைகளையும் முன் வைத்திருக்கிறது. ஆனால் அதே நேரம் இப்போது கடல் எல்லை தீவிரமான நிலையை அடைகிறது என்ற அச்சமும் நாடுகளிடம் உண்டு. குறிப்பாக ரஷ்சியா மேற்கு நோக்கி எனது விஸ்தரிப்பை தீவிரபடுத்துகின்ற ஒரு சூழலில் ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி சமாதானத்தின் ஊடாக ரஷ்சிய மீது அழுத்தத்தை பிரயோகித்து உக்கிரேன் பலப்படுத்துகின்ற விதத்தில் செயல்படமுடைகின்றது. இதனால் உக்ரையின் மீதான போரை இராணுவ ரீதியில் பலப்படுத்திக் கொண்டு இராஜந்திர ரீதியில் அதாவது சமாதானத்தை உச்சரித்துக் கொண்டு நகர்வதற்கு மேற்கு ஐரோப்பிய நாடுகள் அதன் தலைவர்கள் முயல்கிறார்களா என்ற சந்தேகம் ரஷ்சியாவுக்கு உண்டு.
இரண்டாவது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் ஒரு முயற்சியில் உக்ரையின் ரஷ்சியப் போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக ரஷ்சியா மீது அதன் நிறுவனங்கள் மீதும் தடைகளை விதித்தது அமெரிக்கா. அது சாத்தியப்படாத போது உக்ரையின் மீதான அழுத்தத்தை தீவிரபடுத்த ஆரம்பித்துள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர இரண்டு பிரதான உத்திகளை ட்ரம்ப் முன்வைத்திருக்கிறார். ஊக்ரையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாதுகாப்பு அரணாக கருதும் பிரதேசங்களை விட்டு வெளியேறுவதுடன் ரஷ்சியாவின் கோரிக்கைக்கு இசைந்து போகின்ற அணுகுமுறையை உருவாக்க அமெரிக்கா திட்டமிடுகின்றதாக உக்ரையின் இராணுவத்தின் அளவையும் அந்த திறனின் அளவையும் மட்டுப்படுத்துவதற்கான சிபார்சை உக்ரைன் ஜனாதிபதியின் முன்மொழிவோடு மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதை கண்டு கொள்ள முடியும். இவ்வாறான இரு விடயங்களை உள்ளடக்கியே அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் உக்ரேனுக்கு விஜயம் செய்துள்ளார். இத்தகைய அழுத்தங்களை உக்கிரன் எதிர்கொள்ளுகின்ற விதத்தில் மற்றும் துருக்கி போன்ற நாடுகளை நோக்கி பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்புகளை அதற்கான உதவிகளை பெறுகின்ற நோக்கிலும் ஒரு விஜயத்தை திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்காவை முழுமையாக ரஷ்சியாவோடு இணைய விடாதுதடுத்துக் கொண்டு உக்ரின் ஜனாதிபதியை பாதுகாத்துக் கொண்டு மேற்கு தலைவர்கள் இராhஜதந்தியரீதியான அரசியல் களத்தை தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதில் கவனம் கொள்ளுகிறார்கள். ரஷ்சியாவை தனிமைப்படுத்த முயன்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போன சந்தர்ப்பங்களில் போர் நிறுத்தத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் மேற்கைரோப்பா முயலுவதாகவே தெரிகிறது.
எனவே உக்ரையின்-ரஷ்சியப் போருநிறுத்திற்கான முயற்சியினால் முடிவுக்கு வருவது என்பது கடினமான சவாலாகவே தெரிகிறது. காரணம் உகரையரன் ஜனாதிபதி அமெரிக்காவின் வலுவான செல்வாக்குக்குள் இல்லாத நிலையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பிரதான பங்காளியாகவும் செயல்படுவது அமைதியானது சாத்தியமற்றதாக தெரிகிறது. உக்ரையின் பாரிய அழிவுக்கு பின்னரும் ஐரோப்பாவின் கூலியாகவே ஜெலன்ஸ்கி செயல்படுகிறார். ஒரு தேசத்தை அளித்த ஜனாதிபதியாக ஜெலன்ஸ்கி மாறிக்கொண்டிருப்பது உக்ரையினின் துயரமாகவே தெரிகிறது. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் அமைச்சர்களும் ராஜினாமார்களும் அதிகமான அரசியல் நெருக்கடியை உக்ரேனுக்கு ஏற்படுத்தி உள்ளது. இதில் தேர்தலை எதிர் கொள்வரானால் ஐரோப்பாவின் இலக்கு கடினமாகும். நேட்டோவின் இலக்கும் பலவீனமடையும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
