April 21, 2026
அரசியல் கட்டுரைகள்

உலளாவிய இராணுவ சமநிலையில் உக்ரைன் – ரஷ்ய போர் முனைப்பு?

சர்வதேச அரசியலில் அமெரிக்க – ரஷ்ய மோதல் மீண்டுமொரு உலகம் தழுவிய போருக்கு வழிவகுக்குகின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. உக்ரைனை மையப்படுத்தி அத்தகைய போர் முனையம் ஏற்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குமான நெருக்கம், ரஷ்ய அமெரிக்க முரண்பாட்டில் பலப்படுத்தியது மட்டுமன்றி பனிப்போர் காலம் முழுவதும் முன்னாள் சோவியத் யூனியனும் அமெரிக்காவும் அதீத பகைமை போக்கினை கொண்டிருந்தந்தன. இதன் தொடர்ச்சி பனிப்போருக்கு பிந்திய காலத்தில் நீடித்து வருவதோடு உலக அரசியலில் ரஷ்யா ஓர் இருதய நிலம் என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வு தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றது.

அதனடிப்படையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அமெரிக்க மோதலின் அரசியல் போக்கின் விம்பங்கள் அடையாளப்படுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

அதனடிப்படையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு இலட்டத்தி ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட படைகளை குவித்திருப்பதோடு யுத்தத்திற்கான அனைத்து பொறிமுறைகளையும் வகுத்திருப்பதாக தெரிய வருகின்றது. அண்மையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் வருடாந்த நிகழ்வில் உரையாற்றுகின்றபோது ‘ரஷ்ய இராணுவம் ரஷ்யாவின் எல்லையும், ரஷ்ய மண்ணையும் பாதுகாப்பதற்கு தயாராக உள்ளதுடஆப்கானிஸ்தா, ரஷ்யாவை தாக்க எந்தக் நாடு முயன்றாலும் தகுந்த பதிலடி வழங்கப்படும்’ என எச்சரித்தார். இத்தகைய உரை ரஷ்யா போருக்கு தயாராக உள்ளது என்பதை கோடிட்டு காட்டுகின்றன. அவ்வாறே உக்ரைனும் உக்ரைனுக்கு ஆதரவு நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் நோட்டோ ரஷ்ய எல்லையை நோக்கி நகர்வதோடு தொடர்ச்சியாக விமான பறப்புகளையும் விமான ரோந்தினையும் ரஷ்ய எல்லையோரம் நோக்கி நகர்த்துவதோடு அமெரிக்க யுத்த கப்பல்கள் கருங்கடலை அண்டிய பிரதேசங்களில் உக்ரைனுக்கு ஆதரவாக நகருகின்ற நிலையினை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக அமெரிக்க போர் விமானங்கள் நோர்வே தளத்தில் இருந்து பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் தமது நாட்டின் விமானத்தளங்களில் இருந்தும் ரஷ்யாவின் எல்லை நோக்கி தொடர்ச்சியாக விமானங்களே பறப்பில் ஈடுபடுத்திக்குக் கொண்டு வருகின்றன, இதன் விளைவும் ஏறக்குறைய ஒரு யுத்ததிற்கான முனைப்பாக இருக்கின்றது. அதேநேரம் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelensky) குறிப்பிடுகின்ற போது போரை தடுத்து நிறுத்தும் வகையிலான உத்திகளை வகுக்குமாறும் சமாதான பூர்வமான உரையாடல்களை மேற்கொள்ளுமாறும் ரஷ்யாவிடம் கோரியிருப்பதோடு போரினை தவிர்க்கும் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதத்தில் அவரது கருத்துக்கள் அமைந்ததுள்ளது . அதேநேரம் தமது படைகளையும் தேசிய பாதுகாப்பு சபையினை கூட்டியதன் மூலம் எல்லையோர பாதுகாப்பை பலப்படுத்தவும் படைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் உக்ரைன் ஜனாதிபதி நகர்ந்து வருகின்றார் என்பதும் தெரிகின்றது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நோட்டோ போன்றவற்றுடன் தொடர்ச்சியான உரையாடலை மேற்கொண்டு வரும் செலஸ்கி ரஷ்யாவுடன் ஒரு போரை தனித்து மேற்கொள்ளமுடியாது என்பதை உணர்ந்துள்ளமையை அவரது நடவடிக்கை மூலம் அறியமுடிகின்றது. கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றிய போதே அதனை உக்ரையின் உணர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதேநேரம் இருதரப்பினது யுத்தத்திற்கான முனைப்புகள் அமெரிக்காவாலும் ஐரோப்பிய யூனியனாலும் முதன்மைப்படுத்தப்படுகின்ற போது சமாதான உரையாடலை மேற்கொள்கின்ற ஓர் இரட்டை உக்கியை பின்பற்றுகின்ற போக்கினை அவதானிக்க முடிகின்றது . எதுவாகினும் ரஷ்ய உக்ரைன் யுத்தம் எந்தளவிற்கு முக்கியமானது என்பது அதன் விளைவுகள் உக்ரைனுக்கு ஆபத்தானது என்பதும் நீண்ட நோக்கில் ரஷ்யாவின் இருப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விதத்திலும் கருத்தில் கொள்ளவேண்டிய அம்சமாகும்.

முதலாவது, உக்ரைன் ரஷ்ய யுத்தம் ரஷ்யாவின் நீண்டகால நலன்களை பாதிக்கும் அதேவேளை அமெரிக்க அணிக்கு எதிரான யுத்தமொன்றை நிகழ்த்துவதன் மூலம் உலகளாவிய அரசியலில் மீளவும் ஒர் இராணுவ சமநிலையை அல்லது அதிகார சமநிலையை சாத்தியப்படுத்தமுடியும் . பனிப்போருக்கு பின்பான உலக ஒழுங்கில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் ஈராக்குக்கு எதிராகவும் அமெரிக்கா மேற்கொண்ட யுத்தங்களுக்கு பின்னர் அமெரிக்காவில் இராணுவ ரீதியில் முண்ணனி வகுக்குகின்றது. பொருளாதார அடிப்படையில் சீன அமெரிக்காவிற்கு நிகராக வளர்ந்தபோது இராணுவ இருப்பு என்பது அமெரிக்காவிற்கே உரித்துடையது. உலகம் தழுவிய விதத்தில் அமெரிக்காவோ இராணுவ வலுவுடைய நாடாக சமகாலம் வரையில் கணிக்கப்படுகின்றது. பனிப்போர் முடிவுக்கு வந்த பிற்பாடு எழுந்து ஒற்றைய மைய உலக இராணுவ சமநிலை அமெரிக்காவிடமே இருந்தது. பனிபோருக்கு பின்பின்னான (post- post cold war) காலத்திலும் கொவிட் யுத்த (covid war) காலத்திலும் அமெரிக்காவே இராணுவ சமநிலையை தமது கட்டுபாட்டில் வைத்துள்ளது. எனவே இதிலொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான போர் முனையத்தை நோக்கி ரஷ்யாவும் சீனாவும் நகரும் போது அமெரிக்கா அதற்கான வாய்ப்பை கொடுக்காது செயற்பட்டு வருகின்றது. எனவே இந்த யுத்தம் உலகளாவிய இராணுவ சமநிலையை உலகளாவிய அதிகார சமநிலையை மாற்றத்துக்குள்ளாக்கும். அந்தவகையில் ரஷ்யா ஒரு போரை உலகம் தழுவிய விதத்தில் மேற்கொள்ளமுனைகிறது.

இரண்டாவது, அமெரிக்கவை பொறுத்தவரை ரஷ்யாவின் எல்லை புறத்தை நோக்கி யுத்தத்தை நகர்த்துவது இலாபகரமானது என கருதிகின்றது . அத்தகைய யுத்தத்தை பிராந்திய யுத்தமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட யுத்தமாகவும் கையாள விரும்புகின்றது. உக்ரைனை ரஷ்யாவுக்கு சமமான நாடாக மாற்றுவதன் ஊடாக அதனை ஒரு பிராந்திய யுத்தமாகவும் இரு நாட்டுகுமான யுத்தமாகவும் கையாள விரும்புகின்றது. அதாவது ரஷ்யா விரும்புவது போல் உலகளாவிய தளத்தில் இத்தகைய யுத்தம் நிகழ்ந்து விடகூடாது என்பதில் அமெரிக்கா கரிசனை கொள்கின்றது. அதுமட்டுமன்றி நோட்டோ விஸ்தரிப்பு, ஐரோப்பியன் யூனியன் விஸ்தரிப்பு ரஷ்யாவின் எல்லை நோக்கி நகர்த்துவது அமெரிக்க நவதாராள சக்திகளுக்கு இலாபமானதாக அமையும் என்று கருதுகின்றது. இதனாலே மட்டுப்படுத்தப்பட்ட யுத்தமாக நிகழ்த்தப்படுகின்ற அதேவேளை ரஷ்யாவின் உலகளாவிய நோக்கு நிலைகளும் தடுக்கவும் பலவீனப்படுத்தவும் முடியும் என அமெரிக்க கருதுகின்றது.

மூன்று, ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்க அணிக்கு எதிரான பலமான பதில் அரசியலை (counter politics) மேற்கொள்ளவே வெற்றிக்கண்டு வருகின்றது. பிராந்தியங்களை கடந்து உலகளாவிய தளத்தில் இராணுவம் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை மேற்கொள்வதன் ஊடாக அதிகார சமநிலையை தமது பக்கம் வைத்துக்கொள்ளமுடியும் என கருதுகின்றது . சீனா பொருளாதாரமாக உலகத்தை கையாள முனையும் சந்தர்ப்பங்களில் ரஷ்ய இராணுவ ரீதியில் செயற்பட முனையும் போக்குகள் இரு வல்லரசிடமும் காணப்படும் பிரதான அம்சமாகும்.

எனவே உக்ரைன் போர்க் களமானது உலகளாவிய இராணுவ சமநிலையில் கொவிட் யுத்தம் (covid war) ஒன்றிற்கான முனைவினை அடையாளப்படுத்துகின்றது . அதாவது அமெரிக்கா தலமையிலான அணியை ரஷ்ய தலைமையிலான அணியே உக்ரைன் யுத்ததை உலகளாவிய மற்றும் பிராந்திய இராணுவ சமநிலைகான போட்டியாக கையாள முனைகின்ற போக்கு அவதானிக்க கூடியதாக உள்ளது. அத்தகைய ஒழுங்கானது பல்துருவ பனிப்போர் (multi polar cold war) உலக ஒழுங்காக தென்படுகின்றது. பெருமளவிற்கு இவ்யுத்தம் அமெரிக்க தரப்பினால் தவிர்க்கப்படவும், ரஷ்ய தரப்பினால் முதன்மைப்படுத்தப்படவும் வாய்ப்பு அதிகம் உள்ளது என குறிப்பிட முடியும்.

-பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம்-

நன்றி: தீம்புனல்