April 30, 2026
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க -இஸ்ரேல் தாக்குதலும் ஈரானின் போர் முகமும்?

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு தாக்குதல் போராக பரிமாணம் பெற்றுவருகிறது. இப்போரின் போக்கினை அவதானிக்கின்ற போது ஈரான் தரப்பிலிருந்து போர் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அரிதாகவே காணப்படுகிறது. இதனால் போர் ஈரானை முழுமையாக அழித்தொழிக்கும் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. மறுபக்கத்தில் இஸ்ரேல் தன்னுடைய இருப்பை பாதுகாப்பதற்கு தாக்குதலை நீடிக்க திட்டமிடுகிறது. ஆனால் அமெரிக்காவோ இப்போரின் இலக்கை அடைந்து விட்டது என்றும் அதனால் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று கருதுகின்றது. இக்கட்டுரையும் மேற்குலகத்தின் இஸ்லாத்துக்கு எதிரான போரில் வென்றுள்ளதா என்பதை தேடுவதாக உள்ளது.

முதலாவது இஸ்லாமிய மதத்துக்கு எதிரான போரை மேற்குலகம் நீண்ட வரலாற்றின் நிகழ்வாக பின்பற்றி வருகிறது. சிலுவயுத்த காலத்தில் இருந்து இன்று வரை போரின் எல்லைக்குள்ளேயே மேற்காசிய நிலப்பரப்பின் இருப்பு காணப்படுகிறது. 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யூத அரசு அதன் பரிமாணத்தை மேலும் தீவிரபடுத்த வழிவகுத்துள்ளது. ஈராக் ஆப்கானிஸ்தான் லிவியா என வலுவான இஸ்லாமி அரசுகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்த இஸ்ரேலிய-அமெரிக்க கூட்டு ஈரானை மிக நீண்ட காலமாக எதிர்கொள்ள முடியாது திணறிவருகிறது. ஆட்சித் தலைமைகளையும் இராணுவ தளபதிகளையும் அழிப்பதன் மூலம் ஈரானின் அல்லது இஸ்லாமிய நாடுகளின் எழுச்சியை முடிவுக்கு கொண்டு வர முனையும் தாக்குதல்களாகவே கடந்த காலம் முழுவதும் காணப்பட்டது. அத்தகைய தாக்குதலின் இன்னோர் பரிமாணமாகவே மார்ச்-01 திகதி ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டு தொடங்கியது. தொடக்கிய மறுகணமே அமெரிக்கா போரின் வெற்றிகளை அடைந்து விட்டதாக கணிப்பிடப்பட்டது. துரதிஷ்டம் அமெரிக்காவின் இலக்கை கடந்து அமெரிக்க-இஸ்ரேலிய புலனாய்வையும் கடந்து ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஈரானின் உயர்தலைவர் இன்றியும் இராணுவ தளபதிகள் இன்றியும் தாக்குதலை மேற்கொள்ள தயாரானது. முன்கூட்டியே அதற்கான திட்டமிடலை ஈரான் வகுத்திருந்தது. தாக்குதலின் பரிமாணத்தை மாற்றியத்திற்கு ஈரானுக்கு பாரிய பங்கு இருந்தது. அமெரிக்கா இஸ்லாமிய உயர்தலைவரையும் அடுத்த கட்ட தலைமைகளையும் இராணுவ வீரர்களையும் தளபதிகளையும் கொல்வதோடு போரை முடிவுக்கு கொண்டு வர முனைந்தது. ஆனால் ஈரான் தாக்குதலை போராக மாற்றுவதில் முனைப்பு காட்டியது.

இரண்டாவது இப்போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி உண்டு. ஈரான் தரப்பில் இருந்து அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. மாறாக ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்த போதும் நேரடியாக போரில் ஈடுபட மறுத்தமை போரின் ஏனைய சக்திகளின் அதாவது ஈரான் சார்பு சீன ரஷ;சிய தரப்புகளில் ஈடுபாட்டை தவிர்ப்பதற்கான உபாயமாகவே தெரிகின்றது. ஐரோப்பிய நாடுகள் போரில் ஈடுபடும் சூழல் ஏற்படுமாக இருந்தால் சீனா ரஷ;சியா போன்ற நாடுகள் போரில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதீதமாக காணப்பட வாய்ப்பு உண்டு என அமெரிக்கா கருதுகிறது. தற்போது கூட சீனா பெரிய அளவில் ஈரானுக்கு உதவியோடு ரஷ;சியாகவும் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை ஈரானுக்கு வழங்கி வருகிறது.

மூன்றாவது இப்போரின் பரிமாணத்தை முதன்மைப்படுத்தும் நோக்குடன் அமெரிக்க ஆதரவு பெற்ற அராபிய நாடுகள் மீது ஈரான் பாரிய தாக்குதல் ஒன்றை அமெரிக்க தளங்கள் மீது நிகழ்த்தியது. அமெரிக்கா போர் விமானங்கள் கப்பல் படை போன்றவை மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் போர் பரிமாணத்தை ஏற்படுவதுடன் அமெரிக்க தளங்களை அராபிய நாடுகளில் இருந்து அகற்றுவதற்கான நகர்வென்றை மேற்கொண்டு உள்ளது. இது ஒரு அபாயமான விளைவை ஈரானுக்கு ஏற்படுத்தும் என விவாதித்தாலும் தெகிரானின் நடவடிக்கை முழுவதும் அமெரிக்க தளங்களை இழக்க வைத்ததாக காணப்படுகிறது. அத்தகைய தளங்களிலிருந்து ஈரானுக்கு வரக்கூடிய தாக்குதல்களை தவிர்தத்மை ஈரானின் வெற்றியாகவே தெரிகிறது.

நான்காவது ஈரானின் நடவடிக்கை உலகளாவிய போர் குறித்த வாய்ப்பை உருவாக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. மீண்டும் ஒரு உலகப் போருக்கான பரிமாணமாக அமைவதற்கான வாய்ப்பை ஈரான் உருவாக்க விரும்புகிறது. அதற்கான அடிப்படை ஈரான் தனது அணு ஆயுத பரிசோதனையை கைவிட மறுத்தது மட்டுமின்றி ஏவுகணை தொழில்நுட்பம் இஸ்ரேலின் இருப்பை பாதிக்க செய்யும் அடிப்படையில் இப்போர் பிராந்தியத்தை கடந்த போராக மாறுவதற்கான வாய்ப்பை எதிர்பார்க்கின்றது. பாகிஸ்தானின் வெளிப்படையான தெரிவிப்புக்களும் முன்வைத்துள்ளது. இப்போரில் புதிதாக கைகோர்க்கும் வடகொரியா முக்கியம் பெறுகிறது. வடகொரியா இப்போது உலகளாவிய போர்ப் பரிமாணத்தை தோற்றுவிக்கக் கூடிய நிலையில் தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறது. இப்போரின் பரிமாணம் சாத்தியப்படுவதற்கான வாய்ப்பை கொடுக்கக் கூடியதாகவே வடகொரியாவின் வெளிப்பாடுகள் காட்சிப்படுத்துகிறது. ஆனால் எந்த அளவுக்கு வடகொரியாவின் நேரடி ஈடுபாடு சாத்தியமாகும் என்பது கேள்விக்குரியது.

ஐந்தாவது இப்போரில் இந்தியாவின் பங்கு மிக மோசமான வெளியுறவு கொள்கையின் பிரதிபலிப்பாக காட்சிப்படுத்தப்படுகிறது. இந்தியா மரபார்ந்த வெளியுறவுக் கொள்கையிலிருந்து விலகி இஸ்ரேலோடு கைகோர்த்துக் கொள்ளும் நிலை ஈரானுக்கு எதிரான போரில் இந்தியா இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்து இருப்பதாகவே கணிக்கப்படுகிறது. இந்து சமுத்திரத்தில் அமெரிக்கா ஈரான் கடற்படைக் கப்பல் மீதான தாக்குதல் தொடர்பிலும் அத்தகைய சந்தேகம் மேலும் வலுப்பெறுகிறது.

ஆறாவது ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேலியத் தாக்குதல் போர் பரிமாணத்தை பெற்றுள்ளது. இப் பரிமாணம் உலகப் போருக்குரிய பரிமாணமாக மாறுவதற்கு முன்னர் அதனை முடிவுக்கு கொண்டு வர சீன ரஷ;சிய தரப்பு முயலுகின்றது. போரின் பிரதான அடைவை எட்டிய அமெரிக்கா போர் நிறுத்தத்துக்குள் செல்வது அதற்கு இலாபகரமானதாகவே காணப்படுகிறது. ஆனால் ஈரான் தனது உயர் தலைவரையும் மக்களையும் இராணுவ தளபதிகளையும் ஆயுத தளபாடங்களையும் பாரியளவில் இழந்துள்ளது. இந்நிலையில் போர் நிறுத்தம் என்பது அமெரிக்காவுக்கு இலாபகரமானதாக அமையுமே அன்றி ஈரானுக்கு ஒரு போதும் வாய்ப்பை ஏற்படுத்தாது. மீளவும் ஈரான் எழுச்சி பெற முயற்சிக்கின்ற போது மீண்டும் ஒரு தாக்குதலை எதிர்காலத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை தவிர்க்க முடியாதாக அமைய வாய்ப்புள்ளது. அதனால் ஈரான் போரை நிறுத்துசவதில் முனைப்புக் காட்ட விரும்பாது.

எனவே இப்போர் முடிவுக்கு வருவதற்கான சூழல் மிகக் குறைந்தளவிலேயே உண்டு. நடவடிக்கை தீவிரமாக இருப்பதாகவும் அமெரிக்கா தரப்பு அதிக நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அதே நேரத்தில் ஏஐ தொழில்நுட்பம் முழுமையாகவே போரின் உண்மை தன்மையை மறைத்துள்ளது. போரின் உண்மையான பக்கங்களை தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஏஐ தொழில்நுட்பத்தின் நகர்வுகள் காணப்படுகிறது. எவ்விடத்தை முதன்மைப்படுத்தினாலும் போரில் அமெரிக்கா தனது இலக்கை அடைந்துள்ளது. ஒரு ஆட்சி மாற்றத்தை தலைமைகளை கொல்வதன் மூலம் சாத்தியப்படுத்த முடியும் என்ற தாராள ஜனநாயகத்தின் முகத்தின் இயல்பாக ஈரான் மீதான போர் உணர்த்தியிருக்கின்றது. ஈரானில் அமெரிக்கா தோற்கடிக்கப்படுமாயின் முழுமையாக அதன் உலகளாவிய பலம் காணாமல் போகும். இதனால் போரை முடிபுக்கு கொண்டுவரும் நகர்வுகள் அதிகமாக அமையும். அது ஈரானின் கைகளிலேயே உண்டு.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)