ஈரானை மையமாகக் கொண்ட மேற்காசியா அரசியல் நகரப் போவதற்கான சூழல் மேலும் அதிகரித்து செல்ல ஆரம்பித்துள்ளது. கடந்த வாரத்தில் சீனாவுடனான 25 ஆண்டு கால உடன்படிக்கை பாரிய அதிகாரப் போட்டியை வல்லரசுகளுக்கிடையே தொடக்கியுள்ளது. அது மட்டுமன்றி அத்தகைய உடன்படிக்கைக்கு பின்னால் ஏற்பட்டு;ளள அணுவாயுத உற்பத்திக்கான யுரேனிய செறிவூட்டல் பற்றிய சந்தேகம் மேற்கு நாடுகளை ஈரானுடனான உரையாடலுக்கு வழிவகுத்துள்ளது எனலாம். அதன் பிரகாரம் 06.04.2021 அன்று வியன்னாவில் நிகழ்ந்த ஈரான்-மேற்குலக சந்திப்பின் பரஸ்பர இராஜதந்திர நகர்வை நோக்குவதே இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்.
அமெரிக்கா பொறுத்தவரை மேற்காசியா எண்ணெய்வளத்திற்கும் போரியல் உத்திகளுக்கும் ஆக்கிரமிப்பு அரசியலுக்கும் முக்கியமான பிராந்தியமாகும். அவ்வகையில் அமெரிக்காவின் அதிகாரத்தினை மேற்க்காசியாவில் நிலைநிறுத்துவதற்கு ஈரானும் அதன் நட்பு நாடுகளான ரஷ்சியா மற்றும் சீனாவின் நகர்வுகள் தடையாக அமைந்திருப்பதுடன் ஈரானின் அணுவாயுத உற்பத்திக்கான வாய்ப்புகளும் ஆபத்தானவையாக அமைந்துள்ளன. கடந்த 2015 உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பின்பு ஈரானின் பலம் பலமடங்கு அதிகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்ன் பலவீனமான அணுகுமுறைகளை சரிசெய்துவரும் பிடன் நிர்வாகம் மீண்டும் ஈரானுடன் ஒரு பேச்சுவாத்தையை அல்லது ஈரானின் அடிபணிவை ஆரம்பிக்க திட்டமிட்டது. ஆனால் அதில் தெளிவான கொள்கையுடன் செயல்படும் ஈரான் பொருளாதாரத் தடையையும் அணுவாயுத பரிசோதனையையும் தந்திரேபாய பக்கங்களாக கொண்டு செயல்பட ஆரம்பித்தது.அதன் ஒரு கட்டமே வியன்னா சந்திப்பாகும்.
வியன்னாவில் பால்ரூம் ஹோட்டலில் நிகழ்ந்த சந்திப்பில் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, ஜேர்மனி என்பவற்றுடன் ரஷ்யாவும் கலந்து கொண்டன. ஈரானுடனான சந்திப்பில் ஈடபட்ட நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்படாது தனித்து தனது சிறப்பு தூதர் ராபர்ட் மாலி தலைமையிலான அமெரிக்க அணி ஈரானுடன் பேசுவதற்கு காத்திருக்கின்றது. காரணம் அமெரிக்கா ஏற்கனவே ஈரானுடனான அணுவாயுத உடன்பாட்டிலிருந்து வெளியேறியுள்ளமையாகும். அதனால் ஐரோப்பிய நாடுகளுடனான உரையாடல் நிகழும் ஹாட்டலுக்கு அண்மிய ஹாட்டல் ஒன்றில் ஈரானுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த திட்டமிட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான இரு அணிகள் இரு நாட்டினையும் இணைந்து பயணிக்க முயல்வதாகவும் அதற்கான வழிவகைகளை மேற்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பின் காலத்தில் உடன்பாடடிலிருந்து விலகிய பின்னர் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்குவதன் மூலம் அமெரிக்காவை இணைத்துக் கொள்வது என்பது பொறுத்து கவனம் செலுத்துவதற்கு தனியான செயற்குழுவை நிறுவ அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன. அவ்வாறே அணுசக்தி செறிவூட்டல் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மீதான எல்லைப்படுத்தலை ஏற்படுத்த ஈரானை இணங்க வைப்பதற்கான நகர்வுகளை இரண்டாவது அணி மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது. ஆனால் அமெரிக்காவுடன் நேரடி சந்திப்பினை மேற்கொள்ள ஈரான் மறுத்திருந்தமை மற்றும் அதனை சரிசெய்ய பிரயோகித்த இராஜதந்திர நகர்வாகவே வியன்னா மகாநாடு பார்க்கப்படுகிறது.
அணுசக்தி உடன்பாட்டில் இரு நாடுகளையும் இணங்க வைப்பதில் ஈடுபாடு காட்டும் அமெரிக்க அதிகாரிகள் அதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதில் அக்கறை செலுத்தி வருவதாக தெரியவருகிறது. அமெரிக்க வெளியுறவுப் பேச்சாளர் பிரைற்ஸ் குறிப்பிடும் போது இத்தகைய முயற்சி உடனடியான முன்னேற்றத்தை தந்துவிடாது விட்டாலும் முன்னேற்றகரமான பேச்சுவார்ததை எனக் கூறினார். அதே நேரம் இது கடினமான இலக்குடையது என்றும் ஈரானுடனான பேச்சுவாத்தைக்காக அமெரிக்கா தயாராக இருக்கும் எனவும் தெரிவித்தார். அதே நேரம் ஈரானின் பேச்சுவாத்தைக்கு தலைமை வகித்த ஈரானிய பிhதி வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராச்சி செய்தியாளர் மத்தியில் குறிப்பிடும் போது அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத்தடைகளை நீக்குவதே அணுவாயுத உடன்பாட்டை புதுப்பிப்பதற்கான முதல்படி என்றார். மேலும் அவர் தெரிவிக்கும் போது அமெரிக்கா முழுமையான பொருளாதார தடையை நீக்கிய பின்னர் ஈரான் அணுசக்தி நடவடிக்கையை நிறுத்தும் என்றார். அது மட்டுமன்றி இத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளும் வரை பேச்சுக்களில் கலந்து கொள்வதில் எத்தகைய ஆர்வமும் ஈரானுக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இங்கு ஒரு சிறந்த இராஜதந்திரப் போர் நிகழுகிறது. வியன்னா மகாநாடு மேற்குலகத்திற்கும் ஈரானுக்குமான இராஜதந்திர நகர்வாக அமைந்தாலும் அதில் அமெரிக்கா பிரதான பங்காளியாகச் செயல்படுகிறது. இதில் ஐரோப்பாவின் பங்கு ஈரானையும் அமெரிக்காவையும் இணைப்பதாகவே தெரிகிறது. அதற்கான நகர்வையே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. பிரதானமாக அமெரிக்காவை அணுவாயுத உடன்பாட்டுக்குள் கொண்டுவருகின்ற அதே நேரம் ஈரானை கட்டுப்படுத்தும் விதத்தில் அத்தகைய அமெரிக்க வருகை அமையவதை உறுதிப்படுத்த விரும்புகின்றன. ஆனால் ஈரானின் போக்கானது ஐரோப்பிய நண்பர்களையும் தவிர்த்துவிட்டு சீனா ரஷ்சியாவுடன் செயல்படலாம் என்ற எச்சரிக்கையைக் கொண்டு பொருளாதாரத் தடையை நீக்கிவிட திட்டமிடுகிறது. ஈரான் பொருளாதாரத் தடையை நீக்குவது தொடர்பில் வெளிப்படுத்தும் தகவலில் நியாயத் தன்மை உடையதாகத் தெரிகிறதை உலகத்திற்கு காண்ப்பித்துள்ளது. அதே நேரம் அமெரிக்காவோ அணுவாயுத பரிசோதனைக்கு எதிராக மட்டுமன்றி ஈரானின் ஏவுகணைப் பரிசோதனை தொடர்பிலும் ஈரானின் தயவில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் பொறுத்தும் ஈரானுடன் பேசவிரும்புவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா தனது உபாயங்கள் எதுவேன்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது.
எனவே இரு தரப்பின் நகர்வுகளும் வியன்னாவில் ஆரம்பித்தாலும் அதன் தொடர் நீடித்ததாக அமைய வாய்ப்புள்ளது. தற்போதுள்ள நிலையில் ஈரான் கை ஓங்கியுள்ளதாகவே மதிப்பீடுகள் வெளியாகியுள்ளது. ஆனால் இராஜதநட்திரப் போர் சாத்தியமற்றுப் போகும் நிலை ஏற்பட அமெரிக்கா வன்முறைi9ய தெரிவு செய்யும். அதன் மூலம் ஈரானை மிரட்ட முடியும் என்பதை கடந்த காலத்தில் அனுபவித்துள்ளது. ஆனால் ஈரானின் பலமானது ரஷ்சியாவும் சீனாவும் என்பதே பிரதானமான தகவலாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
