April 29, 2026
அரசியல் கட்டுரைகள்

ஈரான் மீதான போரும் உலகப் பொருளாதாரத்தின் சரணடைவும்?

ஈரான் எதிரான அமெரிக்க-இஸ்ரேலியர் போர் நீடித்த போருக்கான பரிமாணத்தை அடைகிறது. அத்தகைய நீட்ச்சி உலகப் போருக்கான தரிசனத்தை ஏற்படுத்தும் என்று சந்தேகம் பலமடைந்து வருகிறது. இப்போது அமெரிக்காவின் மையப்படுத்திய உலகம் ஒழுங்குக்கான எண்ணம் சிதைவடைகின்றது. மறுபக்கத்தில் இஸ்ரேல் தன்னுடைய நீண்டகால இருப்புக்கான கட்டமைப்புகளை அழிவுக்குள் தவிர்க்க முடியாது எதிர்கொள்கிறது. அதேபோன்று ஈரான்-அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுப் போரானது ஒரு நீண்ட பொருளாதார சுமைக்குள் ஒட்டுமொத்த உலகத்தையும் கொண்டு செல்ல தயாராகின்றது. இத்தகைய முடிவுகளோடு தற்போது முடிவுறாத நிலையை கொண்டிருப்பதும் அதன் விளைவுகள் உலகப் பொருளாதார மந்த நிலைக்கு கொண்டு செல்ல வழி வகுத்துள்ளது என்பதையும் இக்கட்டுரை தேட முயலுகிறது.

முதலாவது ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேலிய கூட்டு தாக்குதல் ஆரம்ப நாட்களில் ஈரானுக்கு ஏற்படுத்திய அழிவுகள் போன்றே இஸ்ரேல் தற்போது அனுபவித்து வருகிறது. மேற்காசியா என்பது புவிசார் அரசியல் ரீதியிலும் மூலோபாய ரீதியிலும் அதன் தனித்துவம் கொண்டது. அது மட்டுமன்றி அப்பிராந்தியத்தின் எண்ணெய்வளம் உலகப் பொருளாதாரத்தை கொண்டதாக உணரப்படுகிறது. மேற்குலகம் மேற்கு ஆசியாவையே தனது சக்திவளப் பொருளாதார வாய்ப்புகளில் மூலோபாய நிலமாகவும் அதே நேரம் ஆக்கிரமிப்பின் மூலமாகவும் நீண்ட வரலாற்றில் காணப்படுகிறது. 1979ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஈரானை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவுக்கு எடுத்த அனைத்து முயற்சிகளும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. ஆனால் தற்போதைய போர் மேற்குலகத்துக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவின் வெளிப்படையான தோல்வியாக அடையாளப்படுத்தப்படுகிறது. இத்த தோல்விக்கு அமெரிக்கா மட்டுமின்றி இஸ்ரேலும் பிரதான பங்காளியாக காணப்படுகிறது. ஈரானின் அழிவுகள் நிரப்பீடு செய்ய முடியாத பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. ஆனாலும் அதன் போர் உத்திகள் வெற்றிகரமானதாக இல்லாத போதும் அமெரிக்க இஸ்ரேலின் வெற்றியை முடிபுக்கு கொண்டுவந்துள்ளது.

இரண்டாவது அமெரிக்கா இந்த போரில் நேரடியாக இல்லாதுவிட்டாலும் மறைமுகமாக இழப்புக்களை சந்தித்துள்ளது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அமெரிக்கா தனியாக எந்த போரையும் எதிர்கொண்டதில்லை. மேற்கு ஐரோப்பாவின்றி அல்லது நேட்டோ இன்றி எந்த போரையும் நகர்த்தியது கிடையாது. அது குறிப்பாக வியட்நாம் தந்த பாடமாக இருந்தது. அமெரிக்கா-இஸ்ரேலிய கூட்டு என்று இப்போது அழைத்தாலும் பரஸ்பரம் இரு நாடுகளும் வைத்திருக்கும் ஆயுதங்களும் வகுக்கும் உபாயங்களும் ஒன்றாகவே இருந்தன. நேட்டோ-அமெரிக்க உறவு சிதைக்கப்பட்டது அல்லது அமெரிக்காவுடனான முரண்பாட்டை நேட்டோ நாடுகள் எதிர்கொண்டமை அமெரிக்க நெருக்கடிக்கு முக்கியமான காரணமாக தெரிகிறது. இதனை அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அமெரிக்காவின் தோல்வி ஏறக்குறைய உக்ரையின் போரில் ஆரம்பித்திருந்தது. தனித்து ரஷ;சியா மட்டுமின்றி ஐரோப்பாவும் அமெரிக்காவும் உக்கரையின் போரில் பாரிய சிதைவுகளை அடைந்திருந்தன. அவகைச் சூழலிலே அமெரிக்கா தனித்து ஒரு போரை ஈரானுடன் எதிர்கொள்ளுகின்ற நிலைக்கு வழிவகுத்தது. அதன் விளைவே அமெரிக்க நெருக்கடிக்கு காரணமாக தெரிகின்றது. அமெரிக்கா வலுவான இராணுவ பலத்தைக் கொண்ட அரசாக இருந்த போதும் அதன் ஆயுத தளபாடங்களும் தொழில்நுட்ப ரீதியான தாக்குதல் திறன்களும் ஈரானின் பலவீனமான சூழலிலும் ஒரு வெற்றிகரமான முகத்தை சாத்தியப்படுத்தி உள்ளது.

மூன்றாவது இப்போரின் பிரதான சூத்திரதாரியாகவும் ஈரானை அழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடும் செயல்பட்ட இஸ்ரேல் பாரிய இழப்புகளை எதிர்கொள்ள தொடங்கி இருக்கின்றது. இஸ்ரேலின் எல்லைக்குள் 1947 ஆம் ஆண்டிலிருந்து கட்டி எழுப்பப்பட்ட அனைத்து இருப்பையும் இழந்து வருவதோடு யூதர்களின் எதிர்கால இருப்பு பற்றிய சந்தேகங்களை நெதன்யாகு தலைமையிலான அரசாங்கம் எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறது. ஈரானை சிதைத்ததற்கு சமமாக இஸ்ரேல் சிதைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தன்னுடைய நிலப்பரப்பையும் மக்களையும் நேரடியாக இப்போரில் ஈடுபடுத்தவில்லை. ஆனால் இஸ்ரேல் ஈரானைப் போன்று தமது மக்களையும் நிலப்பரப்பையும் நேரடியாக இழந்து வருகிறது. ஈரானின் புவிசார் அரசியல் மூலோபாயமும் இஸ்ரேலின் நிலப்பரப்பின் அமைவிடத்தை விட வலிமையானது. அதனை இப்போது ஈரானின் தொழில்நுட்பம் சார்ந்த ஆயுதங்கள் நிறுவியுள்ளன. ஈரானின் நிலப்பரப்பை துண்டாட இஸ்ரேல் எடுக்க முடிவுகள் அதன் நிலப்பரப்பை முழுமையாகவே அழிவுக்கு உள்ளாக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனால் போரில் அதிக இழப்புகளை இருப்புக்கான உத்தரவாதங்களையும் இழந்த பிரதான நாடாக இஸ்ரேல் மாறி வருகிறது. இஸ்ரேலின் தொழில்நுட்பங்கள் ஆயுத தளவாடங்கள் புலனாய்வு கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டு கொண்டிருப்பது அந்த மக்களை பிரதேசத்தில் இருந்து அவர்களது இருப்பிலிருந்தும் வேகமாக மாற்றக் கூடியது. யூதர்கள் நாடோடிகள் என்பதையும் வெள்ளையர்கள் கொலை வெறியர்கள் என்பதையும் இந்தப் போர் வெளிப்படுத்தியுள்ளது.

நான்காவது தப்போது மூன்று போரில் ஈடுபட்டுள்ள பிரதான நாடுகளும் தமது இருப்பை பொருளாதார வளங்களை இழப்பதோடு உலக பொருளாதாரத்தை மந்த நிலைக்கு இட்டுச் செல்ல வழி வகுத்துள்ளனர். ஈரானைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் வீழ்ச்சி என்பது அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியில் தங்கி இருப்பதாக கருதுகின்றது. அதனால் போரை நீடிக்கவும் உலக பொருளாதார மாற்றத்தை சாத்தியப்படுத்தவும் வழி வகுப்பதோடு சீன ரஷ்சியா ஒத்துழைப்புக்களும் உதவிகளும் இப்போவரின் உலக பரிமாணத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு உலகப் போராக மாறுவதற்கான கட்டத்தை அடைய வேண்டுமானால் சீனா-ரஷ்சியா-வடகொரியா போன்ற நாடுகளின் நேரடி ஈடுபாடு அவசியமானது. ஆனால் அதற்கான வாய்ப்பை மூன்று நாடுகளும் தவிர்த்துக் கொண்டு ஈரான் மூலமாக அமெரிக்காவினதும் மேற்குலகத்தினதும் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறன. இதனால் போரின் போக்கு ஈரானின் கரங்களில் இருப்பதாகவே தெரிகிறது.

எனவே அமெரிக்கா தனது தேசிய நலனில் இருந்து கொண்டு உலக ஒழுங்கை வரைய முன்னெடுத்த போர் அமெரிக்காவுக்கே நெருக்கடியானதாக மாறியுள்ளது. தொழில்நுட்ப வியூகம் அதனையே ஏற்படுத்தக் கூடியது. தொழில்நுட்ப யுகத்தின் முன்னே இராணுவ உத்திகள் நிரந்தரமானவையாக அமைவதில்லை. இப்போது அணு ஆயுத போர் நகர்வென்றுக்கான எத்தனம் காணப்பட்ட போதும் அது ரஷ்சிய சீன போன்ற நாடுகளில் தலையீட்டினாலும் பாகிஸ்தானின் ஈரானுடனான பங்களிப்பினாலும் அதிக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது. போரில் ஈரானியர்கள் சரணடைவது என்பதற்கு பதிலாக உலக பொருளாதாரம் சரணடைந்துள்ளது. பெற்றோலிய வளம் உலகத்துக்கு எவ்வளவு தனித்துவமானது என்பதை இப்போர் அம்பலப்படுத்தி உள்ளது. பெற்றோலியம் உலக பொருளாதாரத்தை வழிநடத்தக் கூடியது அல்லது திசைப்படுத்தகூடியது அல்லது உலக ஒழுங்கை வரைய கூடியது என்பதை ஈரான் மீதான போர் உணர்ந்திருக்கின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)