April 22, 2026
அரசியல் கட்டுரைகள்

சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சிக்கு எதிரான ஜோ பிடனின் உபாயம் வெற்றி பெறுமா?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனது ஐரோப்பிய பயணம் நிறைவை நோக்கி (16.06.2021) உள்ளது. குறிப்பாக ஜி7, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, இறுதியாக ரஸ்சிய ஜனாதிபதி புடினுடனான சந்திப்பு என நீண்ட பயணத்தை நிறைவடைகிறது..அதேநேரம் இச்சந்திப்பின் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்ட Blue Dot Network என்பதை பற்றிய உரையாடல்களையும் முதன்மைப்படுத்தி உள்ளார். இக்கட்டுரையும் அமெரிக்க ஜனாதிபதியின் முதன்மைப்படுத்திய Blue Dot Network தொடர்பான அணுகுமுறைகளை தேடுவதாக உள்ளது.

2019ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் இனுடைய ஆட்சிக்காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட Blue Dot Network தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்-இல் நடைபெற்ற இந்தோ-பசுபிக் வர்த்தக மாநாட்டில் அமெரிக்க ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளின் கூட்டிணைவு திட்டமாக அறிவிக்கப்பட்டது. டொனால்ட் டரம்ப்-இன் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் சீனா தொடர்பான முக்கிய கொள்கை வகுப்பாளராகவும் விளங்கிய மத்யூ பாட்டிங்கர் என்பவர் புவிப்பகுதியில் இருக்கும் Blue Netஐ மையப்படுத்தி உங்கள் உணவகங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டை பெறுவது போலாகும் என இத்திட்டத்தை வர்ணித்தார். குறிப்பாக தனியார் துறையை மையப்படுத்திய உட்கட்டமைப்பு முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலும் இத்திட்டமிடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குவாட் என்று அழைக்கப்படும் நாற்கரை பாதுகாப்பு உரையாடலில் இடம்பெற்றிருந்த இந்தியாவை உள்ளீர்ப்பதற்கான அமெரிக்க ஆர்வத்தையும் முதன்மைப்படுத்தியிருந்ததோடு புதுடில்லி பட்டி மற்றும் பாதை முன்முயற்சி அச்சுறுத்தலாக அமையுமென பங்கேற்க மறுத்தது.

அதேநேரம் Blue Dot Network ஆனது ஜி-7, ஜி-20 போன்ற அமைப்புக்களுக்கு உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற கொள்கைகளையும் அதன் தரங்களையும் அடித்தளமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதுடன், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான உலகளாவிய மூலோபாயத்தையும் தொழில்நுட்ப செயற்பாட்டுக்கான உள்ளீடுகளையும் வழங்க முன்வந்துள்ளது. குறிப்பாக உள்ளீடுகளின் தர நிலைகளையும் நிதியாளர்களையும் பங்குதாரர்களையும் ஊக்குவிக்கும் நோக்குடன் இக்கட்டமைப்பு அமெரிக்க உட்பட்ட மேற்கு நாடுகளால் உரையாடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி வோஷpங்டனை தளமாக கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் வல்லுனர்களான மத்யூ குட்மன், டானியல் டுன்டே மற்றும் ஜொனதன் ஹில்மார் ஆகியோர் உட்கட்டமைப்பு முதலீட்டின் நீண்டகால வருவாயை தேடும் ட்ரில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதிக்காக ஓய்வூதியம் மற்றும் காப்பீட்ட் நிதிகள் உட்பட அமெரிக்காவிற்கு தனித்துவமான நிதிப்பலன்கள் உள்ளதென குறிப்பிட்டுள்ளனர். இதனை மேலும் பலப்படுத்துவதற்கு உயர்தரமான சான்றுகளை வழங்கும் பொறிமுறையையும் சிபார்சு செய்துள்ளது.

எனவே, Blue Dot Network என்பது 12 ட்ரில்லியன் டொலர்கள் சொத்தக்களை கொண்டிருக்கும் உலகிலுள்ள 96 நாடுகளை உள்ளடக்கிய 150இற்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பாங்கொக் சந்திப்பில் பங்கேற்றனர் என்றும் அமெரிக்க வெளியுறவுத்தறை தெரிவித்துள்ளது. இந்த ஆரம்ப கூட்ட அமர்வுகளில் உலகின் வலிமை படைத்த சிட்டி மற்றும் ஜே.பி. மோர்கன் உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் பொதுத்துறை அமைப்புக்களும் தாய்லாந்தின் அரச ஓய்வூதிய நிறுவனமும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடக்கூடிய விடயமாகும். இதில் பங்கெடுத்த மூத்த பாதுகாப்பு ஆய்வாளர் கிராஸ் மேன் என்பவர் அவுஸ்ரேலிய ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆகியவற்றின் டொலர்களுக்கு சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சிக்கு பொருந்தாது என்கூறினார். எனவே அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகளின் அணுகுமுறைகள் சீனாவிற்கு எதிரானது. அதிலும் குறிப்பாக பட்டி மற்றும் பாதைகள் முன்முயற்சிக்கு எதிரான நகர்வுகளில் அதிகமாக உள்ளதென்பது தெளிவாகிறது. அதனை விளங்கிக்கொள்ளுதல் அவசியமான ஒன்றாகும்.

முதலாவது ஜோ பிடன் தலைமையிலனா அமெரிக்க நிர்வாகம் தவிர்க்க முடியாது டொனால்ட் ட்ரம்பின் கொள்கையை தொடர வேண்டிய நிலைக்கு அகப்பட்டுள்ளது. அதாவது சீன எதிர்ப்பு நிலை ஒன்றை முன்னெடுக்க வேண்டிய சூழல் கடந்த காலத்தை விட தற்போது அதிகரித்துள்ளது. ஜி7 மாநாட்டில் நிகழ்ந்த உரையாடல்கள் சீனாவின் உலகளாவிய நடவடிக்கைகளுக்கு பதிலீடான நடவடிக்கைகளே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறே ஐரோப்பிய யூனியனுடனான உரையாடல் மற்றும் நேட்டோ நாடுகளுடனான சந்திப்புகளில் ஜோ பிடன் திட்டமிடலாகவும் அமுலாக்க செயன்முறையாகவும் கொண்டிருந்ததை அவதானிக்க முடிகிறது. எனவே அமெரிக்காவின் மிக முக்கிய இலக்காக சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சி மாறியுள்ளது. சீனா என்ற ஒரு நாட்டின் திட்டத்தை ஏகாதிபத்தியங்களின் கூட்டிணைவான ஜி-7 நாடுகள் இணைந்து எதிர்க்க வேண்டிய நிரிப்பந்தம் ஏற்பட்டள்ளது. தனித்த அமரிக்காவோ அல்லது பிரித்தானியாவோ சீனாவின் உபாயத்தை எதிர்கொள்ள முடியாத உலக சூழல் ஒன்று ஏற்பட்டள்ளது.

இரண்டாவது Blue Dot Network ஆனது உலகளாவிய உட்கட்டுமான முயற்சியை இலக்கு வைத்ததாகவே தெரிகிறது. இதே கொள்கையை சீனா 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறது. 2016இல் இதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஒன்றை 2016இல் ஆரம்பித்து அதற்கான அமுலாக்கங்களை மெற்கொண்ட வருகிறது. எனவே Blue Dot Network -இன் பிரதான இலக்கை சீனா அவ்வாறு தென்பூகோள நாடுகளை உட்கட்டமைப்பு எனும் பொறிமுறையூடாக இணைத்த வந்துள்ளது. தாய்லாந்து சந்திப்பானது அதற்கானதொரு ஆரம்ப முயற்சியாகவே காணப்படுகிறது. சீனாவின் புதிய பட்டுப்பாதையை தகர்ப்பது என்பது மட்டுமன்றி தென்பூகோள நாடுகளது உட்கட்டமைப்பு வளர்ச்சிகளையும் அதில் சீனாவின் பங்குகளையும் இல்லாமல் செய்வதே டீடரந னுழவ நேவறழசமஇன் பிரதான இலக்காகும்.

மூன்றாவது, சீனாவின் பொருளாதார வளர்ச்சியை தென்பூகோள நாடுகளை மையப்படுத்தி திட்டமிட்டிருக்கின்ற பொறிமுறையை தகர்ப்பதும் இதன் இன்னொரு நோக்கமாகும். குறிப்பாக இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளது பொருளாதார வளர்ச்சி தென்பூகோள நாடுகளிலேயே தங்கியிருந்தது. தென்பூகோள நாடுகளின் வளங்களையும் சந்தைகளையும் ஆக்கிரமித்த அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பாரியளவான சுரண்டல்களை மேற்கொண்டு தமது நாட்டின் பொருளாதாரத்தினை செழிப்பு நிலைக்கு கொண்டு சென்றன. காலனித்துவத்திற்கு முற்பட்ட காலத்தில் ஐரோப்பிய பேரரசுகள் சுரண்டியது போல் காலனித்துவத்திற்கு பின்னர் அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அத்தகைய சுரண்டலை ஜனநாயம் மனித உரிமை சுதந்திரம் என்ற எண்ணக்கருவோடு மேற்கொண்டன. அத்தகைய சுரண்டலுக்கான ஐரோப்பிய அமெரிக்க வாய்ப்புக்களை சீனா கைப்பற்றியுள்ளது ஆனால் சீனா அதனை றin றin உபாயத்தினூடாக கையகப்படுத்தியிருப்பதுடன் சீனாவிற்குள் மூலதன திரட்சியை வலுவாக்குகின்றது. இதுவே மேற்கு நாடுகளின் பிரதான முரண்பாடாகும். இங்கு இருதரப்புமே சுரண்டல் என்ற உபாயத்தை புதிய தளங்களில் பிரவேசித்து வருகின்றனர். மேற்கினது சுரண்டல் முடிவுக்கு வர சீனாவின் சுரண்டல் ஆரம்பிக்கின்றது. மேற்கின் அணி திரள்வு என்பது சீனாவின் சுரண்டலை தடுத்து தொடர்ந்தும் தமது ஆதிக்கத்தையும் சுரண்டலையும் நிலைநாட்டுவதாகும்.

ஐந்தாவது, உலகத்தை ஆள்வதற்கான போட்டித்தன்மை சீனா எதிர் மேற்கு என்ற நிலை உருவாகி இருப்பதோடு மேற்கினால் ஒன்றுக்கு மேற்பட்ட உபாயம் வகுக்கப்பட்ட போதும் சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சியை இதுவரை தோற்கடிக்க முடியவில்லை ஜி-7, நேட்டோ, ஐரோப்பிய யூனியன், இந்தோ-பசுபிக் உபயாம், குவாட் நாடுகள் என்ற வரிசையில் Blue Dot Networkகும் ஒன்றாக விளங்குகின்றது. இதன் முயற்சிகளும் முன்கூட்டியதை போன்றே பலவீனமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. காரணம் சீனா முன்னெடுக்கும் அதேமாதிரியான உபாயங்கள் சீனா அதில் பயணம் செய்த பல ஆண்டுகளுக்கு பின்னர் மேற்கு தொடங்குவது என்பது அதன் ஆரம்ப பலவீனத்தையே காட்டுகிறது. அதுமட்டுமன்றி மேற்கு நாடுகள் போன்று மேலாதிக்க தளத்திலிருந்து சீனா உலகத்தை அணுகவில்லை. மாறாக சமவலுவுடனயே உலக நாடுகளை அணுக முயலுகிறது.

எனவே, ஜி-7 மாநாட்டு நிறைவுக்கு பின்னர் பிரித்தானிய சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது. அதாவது ஜி-7 போன்ற குழுக்களால் உலகை ஆள முடியாது. அத்தகைய யுகம் முடிபுக்கு வந்த விட்டது. சீனா உலகத்தின் எல்லா அரசுகளையும் சமமாக கருதிக்கொண்டு அனைத்த நாடுகளுடன் பங்கேற்புடன் கூடிய தீர்மானகங்களையே முன்னெடுக்க விரும்புகிறது. அதுமட்டுமன்றி ஜி-7 போன்ற குழுக்கள் சீனா கடைப்பிடிக்கும் அதே கொள்கைகளை காலந்தாழ்த்தி பின்பற்ற முயலுகிறது. சர்வதேச விவகாரங்களில் ஐக்கிய நாடு சபை போன்ற பங்கேற்பு தீர்மானங்களையே சீனா அங்கீகரிக்கும் எனக்குறிப்பிட்டார். ஜோ பிடன் குறிப்பிடுவது போன்று அமெரிக்கா சீனாவிடையேயான பனிப்போர் நிகழ்வதாகவே தெரிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தீம்புனல்)