நூல் குறிப்பு
நூல் தலைப்பு: சமகால சர்வதேச அரசியல்
நூலாசிரியர்: கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்
முதற் பதிப்பு: ஏப்ரல்-2005
பதிப்பாளர்: திருமதி. க.சாந்தினி
வெளியீடு : கல்வியியல் வெளியிட்டு நிலையம்
அச்சிடல்: சிமார்ட் பிறிண்டேஸ்- யாழ்ப்பாணம்.
மின்நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தை அழுத்தவும் (Click செய்யவும்):
முன்னுரை
சென்ற நூற்றாண்டின் நூலில் மூன்று பங்கு காலம் இரண்டு அரசியல் கொள்கைகளுக்கிடையிலான போட்டியால் அல்லது இரு துருவ அரசியலான போராட்டத்தால் நிரம்பியிருந்தது.
ஈற்றில் 80களின் நடுக்கூற்றில் தொடங்கி 90களின் ஆரம்பத்தில் முடிவுக்கு வந்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி ஒரு புதிய அத்தியா யத்தின் ஆரம்பமாக அமைந்தது. முக்கியமாக உலகம் ஒற்றைத்துருவ ஒழுங்குக்குள் வீழ்ந்தது.
ஏதோ ஒருவகையில் அல்லது ஓரளவுக்காவது சமநிலைஎனக் கூறக்கூடிய நிலையில் இருந்த உலக ஒழுங்கும் 3ம் உலக நாடுகள் அணிசேராக் கொள்கை எனச் சொல்லி வல்லரசுகளின் முற்று முழுதான ஆதிக்கத்தைத்த தவிர்க்கீக்கூடியதாக இருந்த நிலைமை யும் குலைந்து போனது.
சோவியத் ஒன்றியத்தின் வீச்சியானது ஆதிக்கப்போட்டி அரசியலில் ஈடுபட்ட முகாம்களுள் ஒன்றின் வீழ்சியாக மட்டுமன்றி ஒரு அரசியல் கொள்கையினதும் அதுவரை வறிய நாடுகளினதும் குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களினதும் விடிவிற்கான வழி என நம்பப்பட்டதுமான ஒரு கொள்கையின் தோல்வியாகவும் அமைந்தது, அல்லது நம்ப வைக்கப்பட்டது.
முதலாளித்துவத்தினதும் முதலாளித்துவ நாடுகளினதும் வெற்றி யாக அமைந்த இந்நிகழ்வை அமெரிக்கா தனது ஏக தலைமைத் துவத்துக்கான அங்கீகாரமாக மாற்றிக்கொண்டது.
கடந்த ஒன்றரைத் தசாப்தமாக எதிர்ப்பேதுமின்றி உலகமயமாதல் என்ற பேரில் நவீனமயப்படுத்தப்பட்ட நன்கு வடிவமைக்கப்பட்ட நலகாலனித்துவப் போக்கு உலகை வேகமாக மாற்றிவருகின்றது. காலப்போக்கில் ஏகாதிபத்திய எதேச்சாதிகாரங்கள் அவற்றின் சுரண் டல்கள் குறித்தான எதிர்ப்புணர்வு மட்டுமன்றி புரிதல்கள்கூட ஏதுமில் லாது ஒரு புதிய உலகை தனது வெளியிடப்படாத இலக்காகக் கொண்டு உலகமாமாதல் வேகமாகவும் வலிமையாகவும் செயற் பட்டுக்கொண்டிருக்கின்றது.
முன்புபோல நாடுகளின் அரசாங்ககங்களை (அதாவது அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள்) மட்டுமல்லாமல் ஒவ்வொரு தனிமனி தனையும் இலக்கு வைக்கிறது உலகமயமாதல், உலக மயமாதலின் பிடியில் சிக்கி ஏகாதிபத்தியங்களின் விருப்புவெறுப்புக் கேற்ப சிந்திப்பவர்களாக செயற்படுபவர்களாக வாழ்பவர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள்.
இத்தகைய சூழலில் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமும் அவசரமும் கூட. விழிப்புணர்வு ஏற்பட்ட இன்றைய சூழலை அதன் அரசியல் பொருளாதார அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். பொருளாதாரமும் அரசியலும் தான் இந்த உலகை இயக்கி வருகின்றது. அதாவது ஒவ்வொரு மனிதனது வாழ்வையும் தீர்மாளிப்பது உலக ஏகாதிபத்தியங்களின் அரசியல் பொருளாதார அபிலாசைகள்தான்.
தமிழில் அரசியல் பொருளாதார அறிவியலைத்தரும் நூல்கள் அதுவும் சாதாரண மனிதர்களுக்கு ஏற்றவகையிலானவை மிகவும் குறைவு. இந்த முயற்சியில் ஈடுபடவேண்டிய நம்நாட்டு புத்தி ஜீவிகளின் செயற்பாடுகள் இன்றும் போதாமலேயே இருக்கிறது.
அந்தவகையில் இந்த நூல் ஒரு நன்முயற்சி. ஆசிரியரின் அம்முயற்சியை பாராட்டி, வரவேற்கின்றேன். இவரின் செயற்பாடுகள் மேலும் மேலும் சிறப்படையட்டும்.
இவரிடமிருந்து மட்டுமல்ல ஏனைய எமது புத்திஜீவிகள், கல்வி மான்களிடமிருந்தும் இத்தகைய செயற்பாடுகளை, வெளியீடுகளை நாம் எதிர்பார்க்கின்றோம்.
நன்றி.
சி. குமரவேள்.
126/2 அரசடி வீதி, யாழ்ப்பாணம்

