அரசறிவியல் சொற்களஞ்சியம்

பாசிசக் கோட்பாடு (Theory of Fascism)

 

பாசிசம் என்பது 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில் தோன்றிய ஒரு தீவிர வலதுசாரி, சர்வாதிகார, மற்றும் அதி தீவிர தேசியவாத அரசியல் சித்தாந்தமாகும். இது சர்வாதிகார அதிகாரம், எதிர்ப்பை வலுக்கட்டாயமாக அடக்குதல், மற்றும் சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான தீவிரக் கட்டுப்பாடு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது தனிமனித உரிமைகளை விட, பெரும்பாலும் இனம் அல்லது கலாச்சாரத்தால் வரையறுக்கப்படும் தேசத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. வீழ்ச்சிக்குப் பிறகு தேசம் புத்துயிர் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசானது சமூகத்தில் ஏனைய எல்லா நிறுவனங்களையும் விட உயர்ந்ததென்றும் அத்தகைய அரசின் மீது அதிக விசுவாசத்தை அல்லது நேசிப்பினை மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவானதே பாசிசக்கோட்பாடு. பாசிசம் என்பது லத்தீன் மொழிச் சொல்லில் புரிதலில் ஒன்றாகும். இணைந்ததன் மூலம் உறுதியும் பலமும் பெற்ற குச்சிகளின் கூட்டு என அதன் உட்கருப்பொருள் வடிவமைக்கப்பட்டது. அதாவது ஒற்றுமை கட்டுப்பாடு மற்றும் விசுவாசம் என்பதை கொண்டிருக்கின்ற ஒன்று என அழைக்கப்பட்டது. இக் கோட்பாட்டின் அடிப்படையில் இத்தாலிய நாட்டின் ஆட்சியாளரான முசோலினி ஜேர்மனிய ஆட்சியாளரான ஹிட்லரும் அறிமுகப்படுத்திய கோட்பாடாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. பாசிசக் கொள்கையின் நீட்சியகவே நாசிசம் அழைக்கப்பட்டது. முதலாம் உலக யுத்தத்தின் தோல்வியின் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாத இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் இக் கொல்கையின் மூலம் மீளவும் எழுச்சி பெறுவதற்கான அடிப்படையைத் தோற்றுவித்திருந்தது. குறிப்பாக வேல்ஸ் உடன்படிக்கையும் பாரிஸ் சமாதான உடன்படிக்கையும் இரு நாடுகள் மீது பெரும் அழுத்தத்தை வெற்றி பெற்ற நாடுகள் கொடுத்திருந்தன. இதனால் ஏற்பட்ட பணவீக்கம் வேலையின்மை வறுமை என்பன புதிய சிந்தனைக்கும் புதிய கொள்கைக்கும் வழிவிட்டது. 1922ஆம் ஆண்டு இத்தாலியிலும் 1933ஆம் ஆண்டு ஜெர்மனியிலும் இக்கொள்கை அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்டது.

தாராண்மை வாதம், தனிமனித ஜனநாயகம் ஆகிய இரு கோட்பாடுகளின் கூட்டு பாசிசம் என்றும் அது ஏதோச்சதிகாரம் என்றும் தேசிய வழிபாடு என்றும் எதிர்கோட்பாடுகளின் வெளிப்பாடு என்றும் அதன் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. பாசிசம் பற்றி எல்லா அதிகாரங்களையும் கொண்ட அரசு என விளக்கம் அளிக்கப்பட்டாலும் பாசிசம் பற்றிய அம்சங்கள் உறுதியான மத்திய படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் எதிர்ப்புகளும் விமர்சனங்களுக்கும் அனுமதி அளிக்காத தேசத்தின் எல்லா விவகாரங்களையும் கட்டுப்படுத்துகின்ற தீவிர தேசியவாதத்தை வலியுறுத்துகின்ற பொதுவான கம்யூனிசத்தை எதிர்க்கின்ற ஒன்றே பாசிசம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அடிப்படையில் பாசிசம் தேசத்தின் மீதான தேசியப் பற்றை குறிப்பதாகும். இது பற்றி பல்வேறு ஆய்வாளர்களும் விமர்சனங்களும் குறிப்பிட்ட போதும் பாசிசம் பற்றிய எண்ணங்கள் உலகளாவிய ரீதியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அது ஓர் அரசாக வலிமை பெற்ற அரசாங்க அடிப்படைகளை பாசிசம் கொண்டிருந்தது. மேற்குலகத்தின் ஜனநாயக மற்றும் தாராண்மைவாதிகள் பாசிசத்தை அதிகார வெறிகொண்டதென்றும் அது உலகத்துக்கே ஆபத்தானதென்றும் கூறி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்திருந்தனர். அடிப்படையில் ஒரு பிரஜை தேசத்தை மேலானதாக நேசிக்க வேண்டும் என்பதே பாசிசத்தின் சாராம்சமாகும். ஆனால் இதனை பின்பற்றியவர்களும் வழிநடத்தியவர்களும் அது எதிர்த்தவர்களும் மிக மோசமான கொள்கையாக உலகத்தின் முன் நிறுத்துவதில் வெற்றி கண்டனர். பாசிசத்தின் தத்துவ அடிப்படை 1932ஆம் ஆண்டு முசோலினி (Benito Amilcare Andrea Mussolini -1883-1945) எழுதிய இத்தாலிய கலைக்களஞ்சியத்திலும், (Encyclopedia Italiana) 1930இல் ஹிட்லர் எழுதிய எனது போராட்டம் (Mein Kampf) என்பதிலும் 1930 ரோஷ்ன்பெர்க் (Alfred Ernst Rosenberg) எழுதிய இருபதாம் நூற்றாண்டின் கற்பனைவாதம் (The Twentieth Century of Myth) என்பதிலும்; முக்கியத்துவம் பெற்ற எழுத்துக்களாகியது. பாசிசம் பற்றிய கருத்துக்களை கோட்பாட்டின் மூலங்களாக அரசை மேம்படுத்துவதற்கான வாதமாக ஏற்கனவே முன் வைத்திருந்தார். அவ்வாறே அக்கோட்பாட்டின் மூலவர்கள் தோமஸ் கொப்ஸின் சர்வ வல்லமை படைத்த இறை என்ற எண்ணமும், பரிட்டோவின் (Vilfredo Federico Damaso Pareto -1848-1923) உயர்குழாம் பற்றிய கோட்பாடும், நீட்சையின் (Friedrich Nietzsche-1844-1900) மகாமனிதன் (Human: All Too Human) என்ற கருத்தும் அதனையே உணர்ச்சி நிற்கின்றது.

பாசிச அரசின் பிரதான பண்புகள்
• அரசை மேலான நிறுவனமாக கருதுதல்.
• சோஸலிசத்தையும் ஜனநாயகத்தையும் எதிர்த்தல்.
• பிரஜைகளின் நாட்டுப் பற்றையும் அதன் மூலமாக இன உணர்வையும் ஏற்படுத்துதல்.
• யுத்தத்தினால் அனைத்து விதமான பிரச்சினைக்கும் தீர்வினை எட்டுதல்.
• நாடுகளை ஆக்கிரமிப்பதன் மூலம் தமது தேசத்தை விருத்தி செய்ய முடியும் என்பதை கொண்டிருத்தல்.

இத்தகைய பண்புகளை அதிகம் பிரதிபலிக்கும் பாசிசம் அரசுக்கு முக்கிய கொடுக்கின்ற இயல்பை அதிகம் வலிந்து கட்டிக்கொண்டது. அரசுக்காகவே மக்கள் என்றும் அரசு சமூகத்திலும் பார்க்க மேலானது என்றும் வரையறுத்துக் கொண்டது. அரசின் தலைவனே சகல அதிகாரங்களையும் கொண்ட தனி ஒரு தலைவன் நாட்டிலுள்ள அரசே யாவற்றையும் தீர்மானிக்கின்ற பலத்தை கொண்டிருக்கின்றது. தனி மனிதர்களோ நிறுவனங்களோ அரசை ஆட்சிக்கோ அல்லது அதற்கோ அடிபணிய மறுக்கவோ கூடாது என்பது பாசிசத்தின் தாரக மந்திரமாகும். தனி ஒரு தலைவனின் ஆளுமையில் நம்பிக்கை வைத்து மக்கள் முழுமையாக அவனுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் ஆட்சியாளன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒன்றுகுவிக்கப்பட்ட அதிகாரங்களை பாதுகாக்க எத்தகைய தந்திரோபாயத்தையும் கையாளலாம் என்பதை முதன்மைப்படுத்திக் கொண்டது. அரசை கேள்வி கேட்கவும் கட்டுப்படுத்த ஏனைய நிறுவனங்களுக்கும் அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிடுகின்றது. மக்களை பொறுத்தவரை அரசை எதிர்க்காது அரசுக்காக அவர்கள் தம்மை தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதன்படி அரசுக்கு வெளியே எதுவும் இருக்கக் கூடாது என்றும் அரசுக்கு எதிராகவும் எதுவும் இருக்கக் கூடாது என்றும் வரையறுத்துக் கொண்டதே பாசிசமாகும்.