உலகளாவிய அரசியலின் போக்கு சடுதியான மாற்றங்களை அவ்வப்போது எதிர்கொள்கிறது. அத்தகைய மாற்றங்களுக்கு முகம்கொடுக்கும் விதத்தில் அரசுகளின் இடம் பெயர்வுகளும் ஆட்சியாளர்களின் தலைகீழ் உறவுகளும் இ;ராஜதந்திர செய்முறைகளும் அரசியல் நாகரிகமாக விளங்குகிறது. இந்தியாவை நோக்கி அமெரிக்காவின் அணுகுமுறை தொடர்ச்சியானதாக நிகழ்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது தடவை அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ(Marco Rubio ) இந்தியாவுக்கு வருகை தந்திருக்கின்றார். அமெரிக்கா ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப்ன் இரண்டாவது ஆட்சி காலத்தில் ஆரம்பகாலம் இந்தியா மீதான வர்த்தகக் கொள்கையே இத்தகைய முனைப்பான தொடர்ச்சியான வருகைக்கு காரணமாக விளங்குகிறது. இக்கட்டுரையும் ரூபியோ- ஜெய்சங்கர் சந்திப்பு ஏற்படுத்தியுள்ள முக்கியத்துவத்தை தேடுவதாக உள்ளது.
இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தகம் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற பிரதான விடயங்கள் தொடர்பில் உரையாடல் ஒன்றை இந்திய நகரங்களில் ஒன்றான மும்பையில் (20.10.2026) இடம் பெற்ற சந்திப்பில் இந்திய வெளியுறவு அமைச்சரும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளரும் உரையாடியுள்ளனர். குறிப்பாக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாகவும் மிகவும் அருகில் உடன்பாடு எட்டுவதற்கு தயாராக இருப்பதாகவும் இரு தரப்பினரும் குறிப்பிட்டுள்ளனர். எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவுடனான இந்தியாவின் எரிசக்தி வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான மூலங்களையும் இந்தியாவின் விநியோகச் சங்கிலியை பன்முகப்படுத்துவது தொடர்பிலும் ரஸ்சியாவின் எண்ணெய் இறக்குமதியில் சார்ந்திருப்பதை இந்தியா குறைத்துக் கொள்வது பற்றியும் உரையாடப்பட்டுள்ளது. மற்றும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தியை பற்றிய ஆராய்தல் போன்ற விடயங்கள் விவாதிக்கப்பட்டது. அத்துடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஏற்படுத்துவதும் அமெரிக்க தொழில்நுட்பங்களை இந்தியா ஏற்றுக்கொள்வது குறித்து இரு வெளிவிவகார பங்காளர்களும் உரையாடி உள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு ஆயுதங்கள் கொள்வனவு சார்ந்த விடயங்கள் இதில் முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூபியோவும் ஜெய்சங்கரும் தாஜ்மஹால் ஹோட்டலிலுள்ள 26ஃ11 நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் இத்தகைய உரையாடலுக்குப் பின்னால் இருக்கும் சரியான பக்கங்களை தேடுவது அவசியமானது.
முதலாவது இரு தரப்பு சந்திப்புகளிலும் முதன்மைப்படுத்தப்பட்ட அம்சம் வர்த்தகம் சார்ந்த விடயமாக காணப்பட்டது. அதிலும் இருதரப்பு வர்த்தகத்தை அடைவதற்கான பேச்சுவார்த்தை முக்கியத்துவமானதாக காணப்படுகிறது. இந்தியாவுடானான வர்த்தகத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்ன் அணுகுமுறை பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. இதனை சரி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதாரத்தில் ஏற்பட்ட பலவீனமே காரணமாக நோக்கப்படுகிறது. நாடுகளுக்கிடையிலான உறவு என்பது இராஜதந்திர ரீதியில் கையாளப்பட வேண்டிய ஒன்றானது என்ற அடிப்படையில் உள்ளது. குறிப்பாக முதலீடு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் வேலை வாய்ப்பு சார்ந்து அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையை இந்திய வெளியுறவு அமைச்சர் பொருளாதார இராஜதந்திரம் (Economic Diplomacy)என்ற செய்முறைகூடாக நகர்த்தி உள்ளார். அவரது உரையாடலும் ஊடகங்களுடனான சந்திப்பும் இந்தியாவின் தனித்துவமான நிலைப்பாட்டையும் அதன் மூலமாக முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்திருந்தது.
இரண்டாவது இரு நாட்டுக்குமடை எரிசக்தி தொடர்பில் அதிக விவாதங்கள் பல ஆண்டுகளாக நிகழ்ந்துவருகிறது. அதிலும் குறிப்பாக ரஸ்சியாவிடம் இருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கைகளையும் தடைகளையும் வரி மூலமான நெருக்கீடுகளையும் இந்தியா மீது திணித்து வந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவே ரஸ்சியாவிடமிருந்து பெற்;றோலியத்தை இறக்குமதி செய்கின்ற நிலை ஏற்பட்ட பிற்பாடு இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு எது என்பதை தெளிவுபடுத்தியதோடு அது ஒரு வகையில் எரிசக்தி இராஜந்திரத்தின் முனைப்பான ஒரு அம்சமாக நோக்கப்படுகின்றது. இந்தியா எரிசக்தியின் தேவையை நிறைவு செய்வதற்கு பல்வேறு நாடுகளிடமிருந்து இறக்குமதியை முதன்மைப்படுத்துகிற போது அது தனது தேசிய நலனை முதன்மையானதாக கருதியதன் வெளிப்பாட்டை ஜெய்சங்கர் மீண்டும் ஒரு தடவை அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மூன்றாவது இரு நாட்டுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை முதன்மைப்படுத்தும் உரையாடல் முக்கியமானது ஒன்றாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பாதுகாப்பு சார்ந்து இராணுவம் தொழில்நுட்பங்களை இந்தியா பயன்படுத்துவது தொடர்பில் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட முனைகிறது. அத்தகைய சூழல் என்பது இந்தியாவின் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை அரசியல் சார்ந்த முதன்மைப்படுத்துகின்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்த போதும் மறுபக்கத்தில் ரஸ்சியாவுடனும் சீனாவுடனும் அமெரிக்காவுடனும் சமதூரத்தில் செயல்பட முனைகிறது என்பதை அடையாளப்படுத்த ஜெய்ங்கர் முயன்றுள்ளார். இதனை சுயாட்சிக்கான புவிசார் இறையாண்மை(Geopolitical Sovereignty for Autonomy) எனக் குறிப்பிட முயலுகின்றார். கடல் சார்பாக கடல்வழி வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு இணைப்புகளை வலுப்படுத்துதல் பிராந்திய இணைப்புகளை பலப்படுத்துதல் இந்தோ-பசுபிக் மூலபாயம் போன்ற விடயங்களை இந்திய தரப்பு முன்வைத்திருந்ததோடு கடல்சார் பாதுகாப்பு பற்றிய அம்சங்களில் அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து ஒத்துழைப்பை முதன்மைப்படுத்த முனைவதில்; கவனம் செலுத்தியுள்ளது.
நான்காவது பிராந்திய ரீதியில் மேற்காசியா மற்றும் இந்து சமுத்திரம் சார்ந்த விடயங்களில் உலகளாவிய முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு மேற்காசிய நாடுகளுடன் எரிசக்தி தேவைகளை நிறைவு செய்வதிலும் பல்பக்க இராஜதந்திரத்தை வலுப்படுத்தும் விதத்தில் பிராந்திய எரிசக்தி பாதுகாப்புக்கும் பொருளாதார ஒத்துழைப்பிற்கும் முன்னுரிமை கொடுப்பது என்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளருடன் ஜெய்சங்கர் உரையாடியுள்ளார். அதே நேரம் வளர்ந்து வரும் நாடுகளில் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் கூட்டுறவையும் வலுப்படுத்துவது பற்றியும் ஜெய்சங்கர் ரூபியோவுடன் உரையாடியுள்ளார்
ஐந்தாவது இந்திய வெளியுறவு அமைச்சர் ரூபியோவோடு உரையாடுகின்ற போது அமெரிக்கா ரஸ்சியா சீனா போன்ற வல்லரசுகளுடன் உறவுகளை இந்தியா பேணுவதும் அவற்றுடனான உறவை தீர்மானிப்பதும் அதனை முடிவெடுக்கும் சுதந்திரத்தை பாதுகாப்பதும் குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார். தேசிய நலன்களுக்கு ஏற்ற வகையில் இந்தியா நாடுகளுடன் உறவுகளை பேணுவது பற்றி இந்திய மிகத் தெளிவான அடிப்படைகளை அமெரிக்காவுக்கு வலியுறுத்தியுள்ளது. இத்தகைய மூலோபாய சுயாட்சி(Strategic Autonomy) பற்றிய விடயத்தை அடையாளப்படுத்தியுள்ளார் ஜெய்சங்கர். வல்லரசுடன் ஒரு வர்த்தகப் பாதுகாப்பு பொருளாதார உறவை கட்டமைப்பது பற்றி இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது. அது இந்தியாவின் தேசிய நலன் சார்ந்தது எனக் குறிப்பிட்டார்.
எனவே உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வரும் உலக ஒழுங்கு நிலையை சாதகமாக்கிக் கொண்டு பலதரப்பு இராஜதந்திர முனைப்புடன் அதே சந்தர்ப்பத்தில் வலுவான சக்தியாக தீர்மானம் எடுக்கும் சுயாட்சி திறனை உறுதிப்படுத்தும் விதத்தில் இத்தகைய உரையாடலை இந்திய வெளியுறவு அமைச்சர் நகர்த்தி உள்ளார். ஆனால் அமெரிக்க தரப்போ தொடர்ச்சியாக இந்தியாவை அணுகுவது என்பது தென்பூகோள நாடுகளின் எழுச்சிமிக்க கட்டமைப்புகளையும் அவற்றின் பொருளாதார ரீதியான பலன்களையும் கையாளுவதற்கான உத்தியாகவே தெரிகிறது. முன்பின் முரணான விவாதங்கள் எழுந்த போதும் அமெரிக்கா தொடர்ச்சியாக இந்தியாவை ரஸ்சியா, சீன ஈரானுடனான நட்புறவிலிருந்தும் விலக்கிக் கொள்ள முயற்சிப்பதோடு இஸ்ரேலுக்குரிய ஆயுத விநியோகத்தில் இந்தியாவின் அணுகு முறையை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது. அமெரிக்கா இந்தியா இஸ்ரேல் என்ற கூட்டின் வலுவைப் பற்றிய உரையாடலை வர்த்தக இராஜதந்திரத்துக் கூடாக நகர்த்துவதற்கு அமெரிக்கா முனைகிறது என்பதே ரூபியோவின் இந்தியா நோக்கிய விஜயம் உணர்த்துகின்றது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:தினகரன்)
