இலங்கை-இந்திய உறவின் பிரதான அங்கமாக ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியும் உள்ளது என்பதை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் இந்திய பயணம் உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் அதன் புவிசார் (Geographical Proximity) முக்கியத்துவம் பொறுத்து அரசியல் பொருளாதாரம் இராணுவ கலாச்சார மரபுகள் சார்ந்து மிக நெருக்கமான உறவு நீண்ட காலம் நிலவுகிறது. சமகாலஇலங்கை-இந்திய உறவானது ஆளும்தரப்பை மட்டுமன்றி எதிர்க்கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு இரு நாட்டுக்குமான உறவை மேம்படுத்துவதற்கு இந்திய இராஜதந்திர ரீதியில் அணுகுமுறைகளை வலுப்படுத்திவருகிறது. இக்கட்டுரையும் சஜித் பிரேமதாசாவினது இந்திய தலைவர்களுடனான சந்திப்புகள் ஏற்படுத்திவரும் முக்கியத்துவத்தை தேட முயற்சிக்கிறது.
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் நான்கு பிரதான விடயங்களை இந்திய தலைவர்களோடு உரையாடுகிற போது முதன்மைப்படுத்தி உள்ளார். ஒன்று, இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் 1987இல் கைச்சாத்திடப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் முன்னொழியப்பட்ட 13வது திருத்த சட்டம் சார்ந்து விவாதங்களை வெளிப்படுத்தி உள்ளனர். இண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார வர்த்தக நிதி மூலதனத்தின் பிரயோகம் என்பனவற்றை உள்ளடக்கிய அதிக விடயங்களை முன்மொழிந்துள்ளார். மூன்று, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு கடல் சார்ந்த கூட்டாண்மையின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு பொறுத்த விடயங்கள் முதன்மையானதாக உரையாடப்பட்டுள்ளது. நான்கு, மீனவர் பிரச்சினை சார்ந்து விண்ணப்பங்களைச் செய்துள்ளார். இதனை விரிவாக புரிந்து கொள்ளுதல் அவசியமானது.
முதலாவது, இலங்கை தீவின் இனப் பிரச்சினைக்கு முன்மொழிக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டம் மூலம் புதிய அரசியல் யாப்பில் அல்லது ஏற்கனவே முன்மொழிக்கப்பட்ட ஏக்கய ராஜ்யத்தில் காணாமல் போவதற்கான வாய்ப்பை ஜே.வி.பி. அரசாங்கம் கொண்டிருப்பதாகவே இந்தியாவால் உணரப்படுகிறது. அத்தகைய சூழல் ஒன்று இந்தியா இலங்கை பொறுத்து பலமான நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எண்ணப்பாங்கு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே ஆளும் தரப்புக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தை கடந்து எதிர்க்கட்சிக்கு கொடுக்க வேண்டிய தேவைப்பாடு இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் போக்கில் ஏற்பட்டிருக்கும் தந்திரோபாய ரீதியான அணுகுமுறைகளை எதிர்கொள்ளுகின்ற விதத்தில் இந்தியா மூலோபாய ரீதியில் அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை பலப்படுத்துவதற்கு எத்தகைய வழிமுறைகள் காணப்படுகிறது. அவற்றை அடையாளப்படுத்துவதும் அதனை கையாளுவதும் அதனோடு சேர்ந்து பயணிப்பதும் இந்தியாவின் தேவைபாடாக விளங்குகிறது. எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர், இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர், இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் இந்திய ஊடகங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனான சந்திப்புகள் என பல விடயங்கள் நகர்த்தப்பட்டுள்ளது. இவற்றுக்குப் பின்னால் இலங்கைத் தீவின் ஆட்சி மாற்றம் ஒன்றுகான வாய்ப்பு எதிர்காலத்தில் ஏற்படுகின்ற போது அதற்குரிய பங்கை எடுக்கக்கூடிய எதிர்கட்சியை கையாளுவதில் முனைப்பு கொண்டிருப்பது கவனத்திற்குரியதாக தெரிகிறது.
இரண்டாவது, இலங்கை உலக வங்கியின் நிதிக்கூற்றுகளுக்கு அமைய மறுசீரமைப்புகளை 2028களில் சந்திக்க தயாராக இருக்கின்றது. இச்சூழலில் இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கருடன் உரையாடுகிறபோது பொருளாதாரத்தார பங்களிப்பையும் நிதி முதலீடுகள் மற்றும் வர்த்தக செய்முறைகளுக்கான ஒத்துழைப்பையும் அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உரையாடியாடியுள்ளார். இலங்கைத் தீவின் பொருளாதார ஒத்துழைப்பு சார்ந்து இந்தியாவுடன் நட்புறவையும் பிராந்திய ரீதியான பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பையும் முதன்மைப்படுத்த எதிர்கட்சித் தலைவர் மற்றும் இலங்கை இந்திய உறவின் பிரதான அங்கமாக ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியும் உள்ளது என்பதை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் இந்திய பயணம் உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் அதன் புவிசார் முக்கியத்துவம் பொருத்து அரசியல்-பொருளாதாரம்-இராணுவ-கலாச்சார மரபுகள் சார்ந்து மிக நெருக்கமான உறவு நீண்ட காலம் நிலவுகிறது. சமகால வடிவமானது ஆளுந்தரப்பை மற்றும் எதிர்க்கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு உறவின் உண்மை தன்மைகளை அல்லது வழுவை மேம்படுத்துவதற்கு இந்திய ராஜதந்திர ரீதியில் அணுகுமுறைகளை வலுப்படுத்தியுள்ளது. இக்கட்டுரையும் சஜித் பிரேமதாசாவினது இந்திய தலைவர்களுடனான சந்திப்புகள் முக்கியத்துவத்தை தேட முயற்சிக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் மூன்று பிரதான விடயங்களை இந்திய தலைவர்களோடு உரையாடுகிறது முதன்மைப்படுத்தி உள்ளது. ஒன்று, இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் 1987இல் கைச்சாத்திடப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் முன்மொழியப்பட்ட 13வது திருத்த சட்டம் வாதங்களை வெளிப்படுத்தி உள்ளனர். இரண்டு, இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி நிதி மூலதனத்தின் பிரயோகம் என்பனவற்றை உள்ளடக்கிய உரையாடலை முன்மொழிந்துள்ளார். மூன்று, இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு கடல் சார்ந்த கூட்டான்மையின் விருத்தி தேசிய பாதுகாப்பு பொருத்த விடயங்கள் முதன்மையானதாக உரையாடப்பட்டுள்ளது. இதனை விரிவாக புரிந்து கொள்ளுதல் அவசியமானது.
முதலாவது, இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்கு முன்மொழிக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டம் மூலம் புதிய அரசியல் யாப்பில் அல்லது ஏற்கனவே முன்மொழியப்பட்ட ஏக்கிய ராஜ்யத்தில் காணாமல் போவதற்கான வாய்ப்பை ஜே.வி.பி அரசாங்கம் கொண்டிருப்பதாகவே உணரப்படுகிறது. அத்தகைய சூழல் ஒன்று இந்தியா-இலங்கை பொருத்தான செல்வாக்கு நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எண்ணப்பாங்கு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே ஆளும் தரப்புக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தை கடந்து எதிர்க்கட்சிக்கு கொடுக்க வேண்டிய மக்கள் தேவைப்பாடு இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் போக்கில் ஏற்பட்டிருக்கும் தந்திரோபாய ரீதியான அணுகுமுறைகளை எதிர்கொள்ளுகின்ற விதத்தில் இந்தியா மூலோபாய ரீதியில் அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டான்மையை பலப்படுத்துவதற்கு இத்தகைய வழிமுறைகள் காணப்படுகிறது. அவற்றை அடையாளப்படுத்துவதும் அதனை கையாளுவதும் அதனோடு சேர்ந்து பயணிப்பதும் இந்தியாவின் தேவைப்பாடாக விளங்குகிறது. எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர், இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர், இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் இந்திய ஊடகங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனான சந்திப்புகள் என பல விடயங்கள் நகர்த்தப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் இலங்கைத் தீவின் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான வாய்ப்பு எதிர்காலத்தில் ஏற்படுகின்ற போது அதற்குரிய பங்கை எடுக்கக்கூடிய எதிர்கட்சியை கையாளுவதில் முனைப்பு கொண்டிருப்பது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வடக்குக்கு விஜயம் செய்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அமுல்படுத்துவது பற்றிய உறுதி உரைகளை வழங்கியிருந்தார்.
இரண்டாவது, இலங்கை உலக வங்கியின் நிதிக்கூற்றுகளுக்கு அமைய மறுசீரமைப்புக்களை 2028களில் சந்திக்க தயாராக இருக்கின்ற ஒரு சூழலில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் உரையாடுகிறபோது பொருளாதாரத்தின் உடைய பங்களிப்பை, நிதி முதலீடுகள் மற்றும் வர்த்தக செய்முறைகளுக்கான ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உரையாடியதோடு; இலங்கை தீவின் பொருளாதார ஒத்துழைப்பு சார்ந்து இந்தியாவுடன் நட்புறவை; பிராந்திய ரீதியான பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பையும் முதன்மைப்படுத்த முயற்சித்திருக்கின்றனர். இது வெளிப்படையாகவே இலங்கையின் பொருளாதாரத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு இந்தியாவில் தங்கி இருக்கும் பொருளாதார செய்முறை ஒன்றுக்குள் இலங்கையை கொண்டு செல்வதற்கான ஒத்துழைப்பை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது எதிர்க்கட்சித் தலைவரின் இந்திய பாராளுமன்ற சபாநாயகர் சந்திப்பிலும் பாராளுமன்ற விஜயத்தின் போதும் அடையாளப்படுத்திய அம்சங்களை வைத்துக்கொண்டு உணர முடிகின்றது. இவற்றை அவதானித்தால் இலங்கைக்கு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி சாத்தியமாகும் என்பதை உணர்த்துவதாக தெரிகிறது.
மூன்றாவது, மிக முக்கியமானது பிராந்திய ரீதியான உறுதித் தன்மையை பெறுவதற்கான அம்சமாகவும் தேசிய பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்பட்டது. இந்திய தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் டோவாலுடனான சந்திப்பு அதிக முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக கடல் சார்ந்த ஒத்துழைப்பு கடல் பாதுகாப்பும் பொருளாதார ரீதியான அம்சங்களை விட இராணுவ ரீதியான முக்கியத்துவத்தை உரையாடல் முதன்மைப்படுத்தி இருந்தது. இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு ரீதியான கூட்டாண்மையை வலுப்படுத்தும் அம்சமாக அத்தகைய உரையாடல் காணப்பட்டது. கடந்த காலத்தை விட அதாவது விடுதலைப் புலிகள் இலங்கை தீவில் செல்வாக்கு செலுத்தி இருக்கின்ற காலப்பகுதியை விட தற்போது இந்தியாவுக்கும் இலங்கைக்குமான கடல் சார்ந்த ஒத்துழைப்பும் அதற்கான அவசியப்பாடும் அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.
நான்காவது, எதிர்க்கட்சித் தலைவர் இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சனை பொறுத்து சர்வதேச சட்டங்களையும் ஐ.நா.வின் பிரகடனங்களையும் முன்மொழிந்து தீர்வுகளை எட்ட முடியும் என இந்திய ஊடகங்கள் முன் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு இந்தியாவுக்குமான கடல் ரீதியான மீனவ முரண்பாடு சர்வதேச நியமங்களுக்கு உட்படுத்தி தீர்த்துக் கொள்வதற்கு முடியும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலங்கைக்கு இந்தியாவுக்குமான கடல் சார் இடைவெளியானது சர்வதேச நியமங்களுக்கு வரைவுகளுக்கும் உட்பட்டதாக இல்லாதது மட்டுமின்றி இரு நாடுகளின் உடன்பாடுகளுக்கூடாக கட்டப்பட்ட எல்லையாக மட்டுமே காணப்படுகிறது. இருநாட்டுக்குமான மீனவர்களின் மோதல் என்பது வளங்கல் சார்ந்தும் சூழல்பாதுகாப்புச் சார்ந்தும் எழுந்திருக்கின்ற மோதலே அன்றி இறைமை பொறுத்து ஏற்பட்டிருக்கும் முரண்பாடு அல்ல. ஆனாலும் அத்தகைய விதிகளை கச்சதீவு தொடர்பில் இலங்கை இந்தியா ஆட்சியாளர்கள் மேற்கொண்ட இரு உடன்படிக்கைகளிலும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, எதிர்க்கட்சித் தலைவரின் இந்திய விஜயமானது அதிக உள்ளார்ந்த எண்ணங்களை உருவாக்கி இருக்கிறது. இந்தியா ஆட்சியாளர்களும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்கான காலப்பகுதியை முன்னுணர்ந்து நகர்வதோடு பிராந்திய ரீதியிலும் இலங்கையுடனான நட்புறவிலும் இந்திய தரப்பின் உத்தரவாதங்களை பேணுவதற்கான அயல்நாடுகள் முதலிடம் என்ற கொள்கையையின் பிரகாரம் செயல்பட முயற்சிக்கிறது. ஜே.வி.பி. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எவ்வாறு ஜே.வி.பி. இன் தலைமையை இந்தியா அழைத்து உரையாடியதோ அவ்வாறான ஒரு முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கியுள்ளது. இது ஒட்டுமொத்தமாக இலங்கைத் தீவைக் கையாளும் நடவடிக்கையாகவே விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். இதன் விளைவு இலங்கைத் தீவில் இரட்டை மோதலை ஏற்படுத்தக் கூடியது.
-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
