September 15, 2026
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்க-ஈரானியப் போரும் மேற்காசியவின் அதிகாரச் சமநிலைக்கான போட்டியும்?

மேற்காசியாவின் அதிகார சமநிலை குழப்பத்துக்குள்ளும் பெரும் இழுபறிக்குள்ளும் அகப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா-ஈரான் மீது போரை அடுத்து மூன்று பிரதான சக்திகளின் எழுச்சியும் அதற்கான கூட்டுக்களும் தயாராகி கொண்டிருக்கிறன. ஆதன் பிரகாரம் அமெரிக்கா-இஸ்ரேல் ஒரு தரப்பாகவும் ஈரான்-ரஸ்சியா-சீனா இன்N;னர் தரப்பாகவும் சவுதிஅரேபியா-துருக்கி-பாகிஸ்த்தான் மூன்றாவது தரப்பாவும் அடையாளப்படுத்தப்படுகின்றது. மூன்று கூட்டுக்களும் மேற்கு ஆசியாவின் அதிகார சமநிலைக்கான இருப்பை கட்டுப்படுத்த முயல்கின்றன. இக்கட்டுரையும் இம்மூன்று கூட்டுக்களின் போக்கினையும் இருப்பையும் அளவீடு செய்யும் முயலுகிறது.

முதலாவது அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டு பாரிய போரை மேற்காசியப் பரப்பில் ஏற்படுத்தியுள்ளது. காசா, மேற்குகரை, லெபனான், சிரியா நோக்கி அத்தகைய தாக்குதலை மேற்கொண்டு இஸ்ரேல் வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல்கள் பாரிய நெருக்கடியையும் மனித அழிவுகளையும் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் அமெரிக்காவும் ஈரான் மீதான தாக்குதலை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஒருபுறம் மேற்காசியாவின் ஆதிக்கத்தை அடைவதற்கு எல்லா வகையான இராணுவ நகர்வுகளையும் பின்பற்றுகிறது. இதில் அமெரிக்க பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்களே விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தோல்வி இஸ்ரேலின் தோல்வியாகவும் இஸ்ரேல் அடையும் தோல்வி அமெரிக்காவை முழுமையாக மேற்காசியாவில் இருந்து அகற்றி விடும் என்றும் அச்சம் கொள்ளப்படுகிறது. ஆனாலும் அமெரிக்கா புதிய அணிகளையும் புதிய உறவையும் தேடி அதிகாரச் சமநிலையை கட்டமைக்க முயற்சிக்கிறது. அமெரிக்க ஆய்வாளர்களும் மேற்கு சார்பாக ஊடகங்களும் ஈரானுடன் அமெரிக்கா கூட்டுச் சேர்வது அவசியம் என்ற உரையாட வலுவானதாக விளங்குகிறது. ஆனால் அமெரிக்காவோ சவுதிஅரேபியாவுடனும் தனது நேட்டோன் நட்பு நாடான துருக்கியடனும் உறவு கொள்வதிலும் ஆபிரகாம் உடன்படிக்கையின் கீழ் அத்தகைய கூட்டை பலப்படுத்தவும் முனைகிறது. குறிப்பாக ஆபிரகாம் (Abraham Accord) உடன்படிக்கைகள் 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கையெழுத்தான உடன்பாடாகும். இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து ஆபிரகாம் உடன்பாட்டில் கையொப்பமிட்டன. சிறிது காலத்திற்குப் பின்னர் மொராக்கோவும் (December 2020 )சூடானும் இணைந்தன. மிக சமீபத்தில் (November 2025) கஜகஸ்தான் இந்தக் கட்டமைப்பில் இணைந்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் இராஜதந்திர ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.

இரண்டாவது அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் நட்பு சக்திகளான சவுதிஅரேபியா-துருக்கி- பாகிஸ்தான்; என்பது 07.09.2026 ஆம் தேதி பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளன. இதனை புதிய மக்கா பாதுகாப்பு உடன்படிக்கை (New Mecca Joint Defence Agreement) எனவும் அழைக்கின்றனர். அவ் உடன்படிக்கையில் உள்ள மூன்று நாடுகளும் ஏறக்குறைய அமெரிக்க மற்றும் மேற்கு ஆதரவு நாடுகளாகவே கடந்த காலங்களில் காணப்பட்டன. அதனை அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு வெளிப்படுத்தி நிற்கிறது. மேற்காசிய நாடுகள் இறுதியாகத் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறனை உறுதி செய்வதற்கான ஒரு துணிச்சலான, முக்கியமான முதல் படி என்று இந்த ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்காசியாவில் நிலவும் ஸ்திரமின்மைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே மிக முக்கியக் காரணிகளாக இருக்கின்றன என்ற புரிதல் அதிகரித்து வருகின்றதைக் காணமுடிகிறது. இப் பாதுகாப்பு உடன்படிக்கையின் உள்ளடக்கம் பிராந்திய ரீதியான அதிகார சமநிலை வலுப்படுத்துவதோடு எதிர்காலத்தில் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஐக்கியத்தையும் பாதுகாப்பையும் சாத்தியப்படுத்துகின்ற நடவடிக்கையாகவே காணப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஈரானுக்கு எதிரான தடுப்பாற்றலை மீண்டும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் அது இஸ்ரேலியத் தாக்குதலை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. துருக்கியின் கண்ணோட்டத்தில் இஸ்ரேல் ஒரு சாத்தியமான ஆக்கிரமிப்பாளராகத் தோன்றுகிறதென்பதை மறுக்க முடியாது. அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய பாரிய தாக்குதல் அமெரிக்காவுக்கு மேற்காசிய இராணுவ புலனாய்வு நடவடிக்கை பாரிய அளவில் பாதித்துள்ளது. அதற்கு மாற்ற ஒன்றை கட்டமைக்க வேண்டிய தேவை அப்பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் மூன்று நாடுகளில் பாதுகாப்பு உடன்பாட்டை அமெரிக்க சார்பான நிலைக்குள்ளேயே அவதானிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதன் உள்ளடக்கம் தனித்துவமான நிலையை உணர்த்துவதோடு துருக்கியின் இராணுவ ரீதியான வளர்ச்சியும் பாகிஸ்தானின் அணுவாயுத பலமும் சவுதிஅரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலுள்ள இராணுவ உறவும் அதன் முக்கியத்துவத்தை தீவிரப்படுத்துகிறது. துருக்கி ஏறக்குறைய ஒரு போருக்கான தயாரிப்பையும் நவீன தொழில்நுட்ப ஆயுதங்களையும் உருவாக்குவதாக தகவல்கள் உண்டு. மூன்று நாடுகளின் பாதுகாப்பு உடன்படிக்கை வளைகுடா நாடுகளின் கூட்டுப் (Gulf Cooperation Council ) போன்றே தென்படுகிறது.

மூன்றாவது மேற்காசியாவின் புவிசார் அரசியல் களம் ஈரானின் நிலப்பரப்பில் மையப்படுத்தி இருக்கின்றது என்ற விவாதங்கள் எழுகின்ற போது மூன்றாவது அணி வலுவானதாகப் பார்க்கப்படுகிறது. ஈரானின் இருப்பும் சீன-ரஸ்சிய ஒத்துழைப்பும் இராணுவ ரீதியில் ஒரு வலுவான சமநிலையை ஈரான் கொண்டிருக்க முயலுகின்றதை காண முடிகிறது. அமெரிக்காவின் தோல்வியும் இழப்பீடுகளும் ஈரான் மீதான தாக்குதலை மையப்படுத்தி விவரிக்கப்பட்டாலும் அடிப்படையில் ரஸ்சியா-சீனா ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால் மேற்காசியாவின் வலுவான அணி ஈரான் ரஸ்சியா சீன கூட்டு காணப்படுகிறது. முழுமையாக பார்த்தால் மேற்காசியாவின் அரசியல் ஈரானின் இராணுவ தொழில் நுட்பத்தில் தங்கி இருப்பதாகவே தெரிகின்றது. ஆனாலும் அமெரிக்கத் தாக்குதல்கள் பாரிய அளவில் ஈரானின் திறனை பாதித்துள்ளது. அமெரிக்க மண்ணில் ஈரான் தாக்குதலை நிகழ்த்தாத வரையும் ஈரானுக்கு பாரிய இழப்பீடுகளை ஏற்படுத்தியிருப்பது தவிர்க்க முடியாததாகும். ஆனால் எதிர்காலத்தில் ஈரான் அமெரிக்க மண் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
எனவே மேற்காசியாவின் அதிகாரச் சமநிலைக்கான போட்டி மூன்று அணிகளாலும் தீவிரமாக பரிசோதனைக்கு உள்ளாகி இருக்கின்றன. போர்கள் ஏற்படுத்தியிருக்கும் விளைவு அபாயமானதாக இருந்த போதும் ஈரான் தலைமையிலான மேற்காசிய கூட்டணி வலுவான அதிகார சமநிலையை கொண்டிருக்கின்றது. துருக்கி சவுதிஅரேபியா பாகிஸ்தான் என்ற அமெரிக்க இஸ்ரேலியர் கூட்டுக்கு சேவகம் செய்கின்ற ஒரு பிரிவாகவே பார்க்கப்படுகிறது அதனால் அதனை இஸ்லாமிய நேட்டோ (Islamic- NATO)என அழைக்கப்படுகிறது. காரணம் அதன் உடன்பாடு நேட்டோவின் விதிகளுக்கு உட்பட்டதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் மேற்காசிய அதிகாரப் போட்டியில் பிரதானமாக இரண்டு அணிகளே மோதிக் கொள்வதை கண்டுகொள்ள முடிகின்றது. அமெரிக்கா-இஸ்ரேல் எதிர் ஈரான்-ரஸ்சியா-சீனா என்பதாகும்.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:தினகரன்)