September 7, 2026
அரசியல் கட்டுரைகள்

ஈரானுடனான போரிலிருந்து அமெரிக்கா வெளியேற முடியாது திணறுகிறதா?

ஈரான்-அமெரிக்கா போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்; ஈரான் மீதான தாக்குதல்களை பாரிய அளவில் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளற நிலையில்; அமெரிக்காவின் உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் ஈரான் மீது பாரிய தாக்குதல் எதனையும் அமெரிக்கா நிகழ்த்தவில்லை எனவும் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தீவிரமடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க ஆளும் தரப்புக்களுக்குள் அதிக முரண்பாடுகளையும் குழப்பங்களையும் அதிருத்தியையும் ஈரான் போர் ஏற்படுத்தியுள்ளதென்பதை தெளிவுபடுத்துகிறது. குடியரசு கட்சியின் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தலை சாத்தியப்படுத்த முடியாத நிலைக்குள் ஈரான் மீதான போர் ஏற்படுத்தியுள்ளது. இடைக்காலத் தேர்தலே குழப்பமடைந்துள்னளது. மறுபக்கத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சரிவு கடன்படு நிலை அதிகரிப்பு உலகளாவிய எண்ணை வர்த்தகத்தின் முடக்கம் பாரிய பெற்றோலியப் பொருட்களுக்கான விலை ஏற்றம் என உலகம் குழப்பத்திற்கான சூழல் காணப்படுகிறது. ஆனால் அமெரிக்காவோ ஈரான் மீதான வலிந்து நிகழ்த்தும் தாக்குதலை கைவிடாது செயல்படுகிறது. ஹார்மூஸ் கைப்பற்றப்படும் வரை போர் நீடிக்கும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது. மறுபக்கத்தில் இஸ்ரேல் ஈரானின் ஆட்சி மாற்றத்தை அல்லது வீழ்ச்சியை அடையச் செய்யும் வரை நிகழ்த்துவது என்ற முடிவோடு விளங்குகிறது. இக்கட்டுரையும் ஈரான்-அமெரிக்க போரில் ஏற்பட்ட அண்மைய போக்கினை அடையாளம் காண முயலுகிறது.

முதலாவது ஹார்மூஸ் நீரிணையை நேரடியாக கைப்பற்ற முடியாத நிலையில் அமெரிக்கா மாறுபட்ட உத்திகளை திட்டமிட்டிருந்தது. முதலில் ஹார்மூஸ் வழித்தடத்துக்கு பதிலாக இன்னொரு வழித்தடத்தை ஓமானை அண்டிய பகுதிக்கூடாக மேற்கொள்ள அமெரிக்க எடுக்கு முயற்சி தோல்வியில் முடிந்தது. ஈரான்-ஓமான் உடன்பாடு அமெரிக்க நகர்வுக்கு நெருக்கடியானது. தற்போது லராக்(Larak) தீவை நோக்கி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. லராக் தீவு (லராக் அல்லது லார்க் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது பந்தர் அப்பாஸ் (Bandar Abbas ) கடற்கரைக்கு அப்பால் ஹோர்மூஸ் நீரிணையில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறிய ஈரானியத் தீவாகும். ஹோர்மூஸ் மாகாணத்தில் கெ~;ம் தீவின் கிழக்கிலும் ஹோர்மூஸ் தீவின் தெற்கிலும் அமைந்துள்ளது. ஹார்மூஸ் நீர்பரப்பின் மிக முக்கியமான சிறிய தீவான லராக் ஏறக்குறைய சுமார் 19 முதல் 30 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. 138 மீட்டர் உயரம் கொண்ட குன்றுகளுடன் கூடிய வறண்ட, கரடுமுரடான நிலப்பரப்பாகும். புவியியல் ரீதியாக ஒரு உப்பு அடைப்பானால் உருவானது எனக் குறிப்பிடுகின்றனர். சுற்றியுள் கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பல்வேறு பவளப்பாறைச் சூழலுக்கான வளமான பகுதியாக உள்ளது. சராசரியாக நூற்றுக்கணக்கான குடும்பங்களை கொண்ட மக்கள் வாழும் இத்தீவில் கும்சாரி(Kumzari) மொழியுடன் தொடர்புடைய உள்;ர் மட்டத்தில் வட்டாரவழக்கு மொழியைப் பேசுபவர்களாக உள்ளனர். இதனை நோக்கிய தாக்குதல்களே அமெரிக்கா தீவிரப்படுத்தி இருப்பதாக தெரிய வருகின்றது. தாக்குதலை எதிர்கொள்ளும் ஈரான் அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா கடற்படையின் கப்பல்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்கா இராணுவ மத்திய கட்டளை மையம் (CENTCOM )வெளியிடுகின்ற தகவல்களுக்கு முரணாக ஈரானி பலம் வலுவானதாக உள்ளதாகவே தெரியவருகின்றது.

இரண்டாவது லராக் தீவு மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் தீவிரமடைய ஈரானும் வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்கத் தளங்களின் நோக்கி பாரிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது. குவைத், கட்டார், அமீரகம் போன்ற பிராந்திய நாடுகளில் அமைந்திருக்கும் அமெரிக்கத் தளங்கள் நோக்கி பாரிய தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக 01.09.2026 இல் ஈரானின் குஹெஸ்டாக் நகரில் நடந்த ஒரு திருமண விழாவின் மீது அதன் ஏவுகணை தாக்கியதில் குறைந்தது ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் 68 பேர்; படுகாயமடைந்தனர். ஈரானிய மக்களுக்கு எதிரான அமெரிக்காவின் குற்றங்களுக்குப் பதிலடியாகவே குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. குவைத் தன் மீது ஈரான் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களைக் கண்டித்துள்ளதுடன் அவை குவைத்தின் இறையாண்மையின் அப்பட்டமான மீறும் செயல் என்றும், குவைத்ன் பாதுகாப்பு மற்றும் அரசியல் உறுதித்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தல் என்றும் விபரித்துள்ளது.

மூன்றாவது ஈரானின் இராணுவ ரீதியான தாக்குதல் உத்திகளின் மத்தியில் அமெரிக்காவோடு பேச்சுவார்த்தை இல்லை என்றும் தாக்குதலை நிறுத்த முடியாது என்றும் அமெரிக்காவால் தாக்குதல் நிறுத்தப்பட்டாலும் அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும் என்றும் ஈரானிய இராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கத் தாக்குதல்களுக்கு ஈரானின் பதில் நடவடிக்கை சமச்சீரற்றதாகவும்; பல் அடுக்குகள் கொண்டதாகவும் இருக்கும் என்றும் ஈரானின் துணை ஜனாதிபதி முகமட் ரஷ ஆரிப் (Mohammad Reza Aref) தெரிவித்துள்ளார். இதே நேரம் அமெரிக்க உப ஜனாதிபதி இத்தகைய தகவல்களுக்கு முற்றிலும் முரண்பாடானதும் எதிரானதும் தீவிரத்தன்மை பொருந்தியதாகவும் காணப்படுகிறது எனவும் தீவிரமான போர் நடைபெறாத போதும் இதனுடைய அழிவுகள் பாரிய அளவில் அமைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தார். அதே நேரம் அமெரிக்காவின் பாரிய கடல்படைக் கப்பல்கள் அராபியக் கடல் பரப்பிலிருந்து விலகி கிழக்கு ஆசிய கடல்பரப்பின் பக்கம் நகர்வதாக தகவல்கள் உள்ளன. துறைமுகங்கள் எங்கும் நிற்காமல் சாதனை அளவாக 250 நாட்கள் கடலில் பயணித்த பிறகு அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் தாய்லாந்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை நீண்ட நாட்களுக்குப பின்னர் ஏறத்தாழ 5,000 மாலுமிகளுக்கு மிகவும் தேவையான ஓய்வை அளித்துள்ளது. ஆரவாரமான இரவு வாழ்க்கைக்கும் பாலியல் சுற்றுலாவுக்கும் பெயர் பெற்ற பட்டாயா கடற்கரை ஓய்விடத்திற்கு அருகில் இந்தக் கப்பல் நங்கூரமிடுகிறது. அமெரிக்க கடற்படைக் கப்பல் ஈரானின் போரில் இருந்து மீண்டுள்ளதாகவே தெரிகிறது.

நான்காவது இஸ்ரேலின் தலைநகரான டெல்அவிவுவ் மீது ஈரான் நடத்திய பாரிய தாக்குதல் யூதர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஈரானிய நவீன ஹைப்பர்சோனிக ஏவுகணைகளைக் கொண்டு அத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்குதல்கள் முற்றாகவே நகரத்தை தாக்கியுள்ளது. அரசாங்க நிர்வாகம் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் அரசாங்க கட்டிடங்கள்; மற்றும் பொது மக்கள் குடியிருப்புகள் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. நவம்பரில் வரவிருக்கும் யூதர்களின் புனிதப் பண்டிகைக் காலத்தில் ஏதேனும் புதிய தாக்குதல்கள் அல்லது ஆத்திரமூட்டல்கள் நடந்தால் இஸ்ரேலிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz )ஈரானை எச்சரித்துள்ளார்.

ஐந்தாவது ஈரான் தனது இராணுவ ஆயுத தளபாடங்களை பலப்படுத்தும் நோக்கில் ரஸ்சியாவோடு பலவான இராணுவ ஒத்துழைப்புகளை நாடியுள்ளது. தரைவழி தொடர்பைக் கொண்டிருக்கும் ஈரான் ரஸ்சியா உடனான முதன்மைப்படுத்தி செயல்பட்டு வருகிறது. புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதிலும் இராணுவ தொழில்நுட்பத்தை பெறுவதிலும் இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவு நிலவுவதாக அமெரிக்காவின் புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகைக்கு வழங்கி உள்ளது. ஏற்கனவே சீனாவோடு ஈரான் கொண்டிருந்த இராணுவ உறவையும் அவ்வாறே ரஸ்சியாவோடு கொண்டிருக்கின்ற இராணுவ உறவும் போரை புதிய வடிவத்துக்குள் கொண்டு செல்ல வழிவகுத்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ரஸ்யாவை எச்சரித்த போதும் அதுக்கு ரஸ்சியா ஷங்காய்-5 மாநாட்டில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஈரானிய ஜனாதிபதி ரஸ்சிய ஜனாதிபதியுடன் நீண்ட உரையாடல் ஒன்றை நிகழ்ச்சி உள்ளனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவில் நெருக்கத்தை வெளிப்படுத்துகின்றது.

எனவே ஈரானிய அமெரிக்க போர்; புதிய இலக்குகளை நோக்கி விரிவடைய தொடங்கி உள்ளது. கடந்த வாரங்களில் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்ததன் பிரகாரம் ஈரானிய அணுவாயுத மற்றும் தகவல் தொடர்பு மையங்களை தகர்க்க போவதாக எச்சரித்திருந்த போதும் அது சாத்தியப்படாத நிலையில் மீண்டும் லார்க் தீவை கைப்பற்றுவதற்கான தாக்குதலை நிகழ்த்தப் போவதாக எச்சரித்துள்ளார். ஆனாலும் சுயாதீனமான தகவல்களின் படி ஈரான் லார்க் தீவில் ஏற்படப்போகும் நெருக்கடியையும் எதிர்கொள்ளும் விதத்தில் செயல்படுவதாக தெரிய வருகின்றது. அமெரிக்கா ஈரானுடன் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்லலாம் என்ற எதிர்பார்க்கை காணப்படுகிறது. அதற்கான சாத்தியப்பாட்டையே அமெரிக்க உப ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:தினகரன்)