அரசறிவியல் சொற்களஞ்சியம்

சுதந்திரமான நீதி (Independent Justice)

சுதந்திரமான நீதி என்பது பொதுவாக அரசியல், சட்டம், சமூக தத்துவம் போன்ற சூழல்களில் பயன்படுத்தப்படும் ஒரு கருத்தாகும். இதன் பொருள் நீதித்துறை அல்லது நியாதிக்கம் செய்யும் அமைப்பு வெளிப்புற அழுத்தங்களின்றி செயல்படுவதைக் குறிப்பதாகும். அரசியல் தலையீடு, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மதம், சாதி போன்ற காரணிகளால் பாதிக்கப்படாத நீதியைச் சுட்டுவதாகும். அதாவது சுதந்திரமான நீதித்துறை என்பது எவ்விதமான பக்கச்சார்பும் அற்றது ஆகும். எந்தவொரு நபருக்கோ அல்லது அமைப்புக்கோ அஞ்சாமல் நீதித்துறை தீர்ப்பினை வழங்கவல்ல தன்மையைக் குறிக்கும். நீதிபதிகள் உடைய நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லாத நிலையையும் நீதித்துறை சுதந்திரம் குறிக்கிறது. அத்தகைய சுதந்திரமான நீதித்துறை இருக்கும் போதே பிரஜைகளுடைய சுதந்திரத்தினையும் அது பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்.

ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படை தூண் சுதந்திரமான நீதி ஆகும். ஆங்கிலத்தில் இதை Independent Justice அல்லது சூழலைப் பொறுத்து Free and Fair Justice என்று கூறலாம். ஒரு நாட்டில் ஜனநாயகம் சரியாக செயல்பட வேண்டுமெனில், அந்நாட்டின் நீதித்துறை எந்த அரசியல் அதிகாரத்தின் அழுத்தங்களுக்கும் உட்படாமல், அனைவருக்கும் நீதியை வழங்க வேண்டும் என்பதாகும்.இதன் முக்கிய அம்சங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்• சட்டத்தின் முன் அனைவரும் சமமாக பேணுதல்
• நீதிபதிகள் சுயாதீனமாக செயல்படுதல்
• மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல்
• அதிகார து~;பிரயோகத்திற்கு எதிராக நீதி நிலைநாட்டுதல்.

சுதந்திரமான நீதி (Independent Justice / Judicial Independence) என்ற கருத்தை வளர்த்த முக்கிய கோட்பாட்டாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் சிலரில் மொண்டஸ்கியூ (Montesquieu) முக்கியமானவர். பிரெஞ்சு அரசியல் தத்துவஞானியான மொண்டஸ்கியூ வலுவேறாக்கம் (Separation of Power) என்ற கோட்பாட்டை முன்வைத்தவர். அவரது கோட்பாட்டின் பிரகாரம் அரசு சட்டம், நிர்வாகம். நீதி என மூன்று துறைகளாக இருக்க வேண்டும் என்றும் அவை ஒவ்வொன்றும் சுயாதீனமாக செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். நீதித்துறை சுயாதீனமாக இருந்தால்தான் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று வலியுறுத்தினார். அவரது படைப்பான The Spirit of the Laws முக்கியமான உள்ளடக்கங்களை கொண்டுள்ளது. சுதந்திரமான நீதி பொறுத்து John Locke விபரணப்படுத்தும் போது மக்களின் இயற்கை உரிமைகளை பாதுகாக்க சுயாதீனமான சட்டமும் நீதியும் அவசியம் என்று கூறினார். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சிந்தனையின் முன்னோடியான ஜோன் லொக் அரசின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று விவாதித்தார். A. V. Dicey   சட்டத்தின் ஆட்சி என்ற (Rule of Law) நூலில் நீதியின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தியவர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை எடுத்துரைத்தார். நீதித்துறை அரசியல் தலையீடு இன்றி இயங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சுதந்திரமான நீதியின் முக்கிய கோட்பாடுகள் நீதித்துறை சுயாதீனம் சட்டத்தின் ஆட்சி மனித உரிமைகள் பாதுகாப்பு வலுவேறாக்கம் அனைவருக்கும் சமநீதி சுதந்திரமான நீதி என்பது ஜனநாயகத்தின் இதயம்; அதை பாதுகாக்க அதிகாரப் பிரிவும் சட்டத்தின் ஆட்சியும் அவசியம் என்று சிந்தனையாளர்கள் வலியுறுத்தினார்.